fbpx

வரிகளில் இருந்து கற்பனை வீடியோக்களை உருவாக்கும் OpenAI Sora..! ஒரு நிமிடம் வரை வீடியோ உருவாக்கலாம்!

OpenAI Sora: அறிவியல் கண்டுபிடிப்புகளில் புதிய உச்சமாக மாறியுள்ளது செயற்கை நுண்ணறிவு திறன். தற்போது உலகில் ஏஐ கருவிகளின் பயன்பாடு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும், குறிப்பாக சாட் ஜிபிடியின் வெற்றி தான் ஏஐ கருவிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது என்றே செல்லலாம். அந்த அளவுக்கு சாட்சிபிடியை தொடர்ந்து பல்வேறு ஏஐ தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், பயனர்கள் உள்ளிடும் (டெக்ஸ்ட்) வரிகளை ஒரு நிமிட வீடியோவாக உருவாக்கும் ‘Sora’ எனும் ஏஐ மாடலை ஓபன் ஏஐ நிறுவனம் உருவாக்கியுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடந்த 2022-ல் ஓபன் ஏஐ நிறுவனம் சாட்ஜிபிடி-யை அறிமுகம் செய்தது. இந்த ஏஐ சாட்பாட் மூலம் பயனர்கள் பல்வேறு விஷயங்களை உரையாடல் மூலம் அறிந்து கொள்ளலாம். சாட்ஜிபிடி-யின் வரவு உலக அளவில் ஜெனரேட்டிவ் ஏஐ குறித்த பேச்சினை பரவலாக்கியது. இதே நிறுவனத்தின் DALL-E மூலம் பயனர்கள் தங்கள் மனதில் கற்பனையாக இருக்கும் படங்களுக்கு உயிர் கொடுக்க முடியும்.

இந்தநிலையில், பயனர்கள் உள்ளிடும் (டெக்ஸ்ட் ப்ராம்ட்) வரிகள் வழிமுறைகளை உள்வாங்கிக் கொண்டு அதற்கு ஏற்ப ஒரு நிமிட வீடியோவாக உருவாக்கும் திறனை Sora ஏஐ மாடல் கொண்டுள்ளதாக ஓபன் ஏஐ நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்பெல்லாம், சினிமா படங்களில் நடிகர்கள் பாடல் பாடினால் ‘இந்தப் பாடலை பாடியது உங்கள் மனம் கவர்ந்த நடிகர்’ என அவரது பெயரை சேர்த்து, பாடலுக்கு கீழே குறிப்பிடுவார்கள். அதுபோல ‘இந்த வீடியோவை உருவாக்கியது Sora ஏஐ’ என குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பயனர்கள் பகிரும் நாள் வெகு தொலைவில் இல்லை. இது குறித்த அறிவிப்பை ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக OpenAI தனது எக்ஸ் தளத்தில், வரிகளின் மூலம் உருவாக்கப்பட்ட கற்பனை வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில், அழகான, பனிமூட்டமான டோக்கியோ நகரம் பரபரப்பாக இருக்கிறது. கேமரா சலசலப்பான நகர வீதி வழியாக நகர்கிறது, பலரைப் பின்தொடர்ந்து அழகான பனிமூட்டமான வானிலையை கற்பனை காட்சிபடுத்தியுள்ளது. அருகிலுள்ள ஸ்டால்கள்.அழகான சகுரா இதழ்கள் ஸ்னோஃப்ளேக்குகளுடன் காற்றில் பறக்கும் வகையில் இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.

இப்போதைக்கு இது பரிசோதனை நிலையில் உள்ளது. டெவலப்பர்கள், ஆர்டிஸ்ட், டிசைனர்ஸ், திரைப்பட படைப்பாளிகள் போன்றவர்களுக்கு மட்டுமே வழங்கி வருவதாக தெரிகிறது. அவர்கள் தெரிவிக்கும் கருத்துகளை கொண்டு இதனை மேம்படுத்திய பிறகு பொதுவெளியில் பயன்பாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
OpenAI Sora: Sora is an AI model that can generate videos from text prompts, using a technique called text-to-video synthesis.

Read More: ” Facebook, Instagram, Threads-ல் உருவாக்கப்படும் ‘AI’ கன்டண்டுகளுக்கு புதிய குறியீடு..”! பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு ‘மெட்டா’வின் திட்டம்.!

Kokila

Next Post

Ayodhya: குழந்தை ராமருக்கு மன அழுத்தம்!… ஓய்வு கொடுக்க தினமும் ஒரு மணிநேரம் கோவில் மூடப்படும்!… அறக்கட்டளை முடிவு!

Sat Feb 17 , 2024
அயோத்தி ராமர் கோவிலை தினந்தோறும் பகலில் ஒரு மணிநேரம் மூடுவதற்கு அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. Ayodhya: உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்ட ராமர் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த மாதம் 22ம் தேதி நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து நாள்தோறும் கோயிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்தபடி இருக்கின்றது. இந்நிலையில் தரிசன நேரத்தில் ஒரு மணி நேரம் கோயிலை மூடுவதற்கு ராமர் கோயில் அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. இதன்படி நேற்று […]

You May Like