செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓபன் ஏஐ, தனது ChatGPT செயலியில் நேரடி ஷாப்பிங் வசதி சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. ChatGPT-யின் Search Mode இல் இது புதிய அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், Google Search போலவே, இணையத்தில் தேவையான பொருட்களை தேடுவது, ஒப்பீடு செய்வது, மற்றும் வாங்குவதை எளிதாக்கும்.
ஓபன் ஏஐ வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, ChatGPT-யின் தேடல் அம்சம் தற்போது அதன் மிகவும் பிரபலமான மற்றும் வேகமாக வளர்ந்து வரும் அம்சமாக உருவெடுத்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1 பில்லியனுக்கும் அதிகமான இணையத் தேடல்கள், ChatGPT Search Mode-ஐ பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
ChatGPT-யின் ஷாப்பிங் வசதியில், தேடல், பொருட்களின் டிடெயில்கள், விலை நிர்ணயம், பயனர் மதிப்புரைகள் மற்றும் நேரடி வாங்கும் இணையதள இணைப்புகள் ஆகியவற்றுடன் வழங்கப்பட உள்ளன என்று ஓபன் ஏஐ அறிவித்துள்ளது. சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், “ChatGPTயில் காட்டப்படும் தயாரிப்பு முடிவுகள் அனைத்தும் சுயாதீனமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அவை எதுவும் விளம்பரங்கள் அல்ல,” என நிறுவனம் உறுதியாக தெரிவித்துள்ளது.
பயனர்கள் விற்பனையாளர் விளம்பரங்கள் இல்லாமல் நேர்மையான தகவல்களையும், பொருட்களையும் பெற வேண்டும் என்பதே எங்களின் நோக்கம், என OpenAI மேலும் கூறியுள்ளது. ChatGPT-யின் புதிய ஷாப்பிங் அம்சம் தற்போது படிப்படியாக அறிமுகமாகி வருகிறது. இது Plus, Pro, இலவச பயனாளர்கள் மற்றும் Login இல்லாதவர்களுக்கே கூட இந்த வசதி விரைவில் கிடைக்கப்போகிறது என OpenAI அறிவித்துள்ளது.
இதன் மூலம், Google Search போலவே ChatGPT-யிலும் விலை ஒப்பீடு, மதிப்பீடு மற்றும் நேரடி வாங்கும் வசதிகள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது. ChatGPT ஷாப்பிங் அம்சம் குறித்து பயனர்கள் கூறுகையில், ChatGPT-யின் இலவச கணக்கில் இந்த வசதியை பயன்படுத்தியபோது, அது சில தயாரிப்பு பரிந்துரைகளை காட்டினாலும், அனைத்து இணைப்புகளும் சரியாக வேலை செய்யவில்லை என தெரிவித்தார்.
OpenAI தற்போது ChatGPT-யின் வாட்ஸ்அப் தேடல் அம்சத்தையும் புதுப்பித்துள்ளது. அதன் பயனாளர்கள் இப்போது 1-800-ChatGPT (+1-800-242-8478) என்ற எண்ணுக்கு WhatsApp மூலம் செய்தி அனுப்பி, புதுப்பித்த பதில்கள் மற்றும் நேரடி விளையாட்டு மதிப்பெண்களை பெற முடியும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், ChatGPT தற்போது மேம்பட்ட மேற்கோள்களையும் வழங்குகிறது. இதன் மூலம், பயனாளர்கள் ஒரே பதிலுக்குள் பல மேற்கோள்களை பெற முடியும், இது தகவல்களை சரிபார்க்க அல்லது ஆராய உதவுகின்றது.
OpenAI தனது ChatGPT-யில் ட்ரெண்டிங் மற்றும் ஆட்டோஃபிலிப்ட் தேடல் அம்சங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், பயனர்கள் வேகமாக தேடல்களை மேற்கொள்கின்றனர். ட்ரெண்டிங் தேடல்கள் மற்றும் ஆட்டோஃபிலிப்ட் பரிந்துரைகள் மூலம் நீங்கள் வேகமாகத் தேடலாம், என்று OpenAI கூறுகிறது.
Read more: மூன்று ஆண்டுகளில் மகிழ்ச்சி நிரம்பிய உலகம் உருவாகும்..! பாபா வாங்கா சொன்னது என்ன?