பிரதமர் மோடியின் இரண்டாவது ஆட்சியின் கடைசி பட்ஜெட் இதுவாகும். இதற்காக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரு சபைகளிலும் உரையாற்றுகிறார். புதிய நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் ஆற்றும் முதல் உரை இதுவாகும்.
நாடாளுமன்றத்தில் புதிய நடைமுறையாக செங்கோல் ஏந்தி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, உரையாற்றிய அவர், “சுதந்திரத்தின் அழியாத காலகட்டத்தின் துவக்கம் இதுவாகும். புதிய நாடாளுமன்ற கூட்டத்தில் உரையாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற இலக்குடன் பயணித்து வருகிறோம். எவ்வளவு இடர்பாடுகள் வந்தாலும், இந்தியா முன்னேற்றப் பாதையில் செல்கிறது. பல விளையாட்டுகளில் இந்தியர்கள் முத்திரை பதிக்கின்றனர்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ”அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டது பெரிமைக்குரியது. கடந்தாண்டு பல வரலாற்று சாதனைகளை இந்தியா படைத்துள்ளது. பெண்கள் முன்னேற்றம், வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்காக அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது” என்றார்.