fbpx

தமிழகமே குட் நியூஸ்…! ஜூன் 19 ஆம் தேதி கல்லூரிகள் திறப்பு…!

கோடை விடுமுறைக்கு பின் கல்லூரிகள் ஜூன் 19 ஆம் தேதி திறக்கப்படும் என கல்லூரி கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

2023 – 24 ஆம் கல்வியாண்டில் பல்கலைக்கழகம் நிர்ணயம் செய்த மொத்த வேலை நாட்களுக்கு குறையாமல் உள்ளது என்பதை கல்லூரி முதல்வர்களே உறுதி செய்து கொண்டு கல்லூரி இறுதி பணி நாட்களை நிர்ணயித்து கொள்ளலாம். அந்தவகையில், கோடை விடுமுறைக்கு பின் கல்லூரிகள் ஜூன் 19 ஆம் தேதி திறக்கப்படும் என கல்லூரி கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வடதமிழகத்தின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பமும், வெப்ப அலையும் ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே, மக்கள் கவனத்துடனும், மிகுந்த எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். ஏப்ரல் ஜூன் மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஒன்று முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் 24-ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த ஆண்டு வெயில் மிகவும் கடுமையாக இருப்பதால் பள்ளிகள் திறப்பில் காலதாமதம் ஏற்படலாம் எனத் தெரிகிறது. மேலும், மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறுவதால், அதற்கு பின்னரே பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்புள்ளது. தனியார் பள்ளிகளில் ஒன்று முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 6 ஆம் தேதி திறக்கப்படும்.

Vignesh

Next Post

களத்தில் 1,202 வேட்பாளர்கள் - மக்களவைத் தேர்தல் 2ஆம் கட்ட வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடக்கம்..!

Fri Apr 26 , 2024
மக்களவைத் தேர்தல் 2ஆவது கட்டமாக இன்று 13 மாநிலங்களின் 88 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. மக்களவை தேர்தலின் 2ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.12 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் […]

You May Like