fbpx

பெட்டகங்களை திறந்தால் பேரழிவு ஏற்படும்.. இந்தியாவின் இந்த மர்மமான கோயில்கள் பற்றி தெரியுமா?

உலகின் மிகவும் தனித்துவமான நாடுகளில் ஒன்றாக இந்தியா கருதப்படுகிறது. இந்தியாவின் பண்டைய வரலாறு மற்றும் வளமான கலாச்சார பாரம்பரியம் உலகம் முழுவதும் பிரபலமானவை. இந்தியா மிகவும் மர்மமான கோயில்களின் தாயகமாகவும் உள்ளது. இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

கால பைரவ நாத் கோவில் (உஜ்ஜைன், மத்திய பிரதேசம்)

உஜ்ஜயினியில் உள்ள கால பைரவ நத் கோயில், சிவபெருமானின் வடிவமான கால பைரவருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, இந்த கோயில் மர்மமானது, ஏனெனில் கால பைரவருக்கு மதுபானம் வழங்கும் பாரம்பரியம் உள்ளது. கோயிலில் பக்தர்கள் மதுபாட்டில்களை வழங்குகிறார்கள். மதுபானம் வைத்து வழிபடுவது கால பைரவரை சாந்தப்படுத்தும் ஒரு வழியாக நம்பப்படுகிறது. எதிர்மறை சக்திகளையும், சாபங்களையும் நீக்கி, பக்தர்களைக் காக்கும் சக்தி கால பைரவருக்கு இருப்பதாக நம்பப்படுகிறது.

ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயில் (திருவனந்தபுரம், கேரளா)

கேரளாவில் இருக்கும் ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயில் விஷ்ணு கோயிலாகும். இந்த கோயிலுக்கு அடியில் காணப்படும் அபரிமிதமான செல்வம் மற்றும் மர்மமான நிலத்தடி பெட்டகங்களுக்கு பெயர் பெற்றது. 2011 ஆம் ஆண்டில், கோவிலில் தொடர்ச்சியான பெட்டகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் ஒன்றில் பில்லியன் டாலர் மதிப்புள்ள பொக்கிஷங்கள் இருந்தன. பல நூற்றாண்டுகளாக இந்த பெட்டகங்கள் சீல் வைக்கப்பட்டும், சில பெட்டகங்கள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளன.

ஏனெனில் இந்த பெட்டகங்களை திறப்பது பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. இக்கோயிலுக்குச் சென்றால் செல்வச் செழிப்பும், நல்ல அதிர்ஷ்டமும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

காமாக்யா தேவி கோவில் (கௌஹாத்தி, அசாம்)

காமாக்யா கோயில், துர்கா தேவியின் அவதாரமான காமாக்யா தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். இது இந்தியாவின் பழமையான கோயில்களில் ஒன்றாகும். இது குவஹாத்தியில் உள்ள நிலாச்சல் மலையில் அமைந்துள்ளது. இந்தியாவின் 51 சக்தி பீடங்களின் ஒரு பகுதியாகும். இந்த கோயில் தாந்த்ரீக நடைமுறைகளுடன் தொடர்புடையதாக அறியப்படுகிறது.

இந்த கோயிலில் பெண் பிறப்புறுப்பு தெய்வமாக வழிபடப்படுகிறது. இந்த கோயில் துர்கா தேவியின் கருப்பை மற்றும் அந்தரங்க உறுப்புகள் விழுந்த இடமாக நம்பப்படுகிறது. கோயிலில் ஆண்டுதோறும் “அம்புபாச்சி மேளா” என்ற திருவிழா நடைபெறும், இது தேவியின் மாதவிடாயைக் கொண்டாடும் ஒரு திருவிழா ஆகும். இது பக்தர்களால் புனிதமாக கருதப்படுகிறது. இந்த கோயிலில் வழிபாடு செய்தால் குழந்தை பேறு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

ஏழுமலையான் கோயில் (திருமலை, ஆந்திரப் பிரதேசம்)

திருமலையில் உள்ள ஏழுமலையான கோயில் நாட்டின் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாகும். இந்த கோயில் பெறும் செல்வம் மற்றும் நன்கொடைகள் பற்றிய மர்மம் தொடர்ந்து நீடிக்கிறது. இது உலகின் பணக்கார கோயில்களில் ஒன்றாகும்.

சிலர் திருப்பதி கோயிலில் பெருமாளின் சிலை தெய்வீகமாக உயிருடன் இருப்பதாகவும், கோயில் அண்ட சக்தியின் தளம் என்றும் நம்புகிறார்கள். மற்றொரு மர்மமான அம்சம் என்னவென்றால், தெய்வத்தின் சிலை எப்போது நிறுவப்பட்டது என்றே யாருக்கும் தெரியாது.

ககன்மாத் கோயில் (சத்தீஸ்கர்)

சத்தீஸ்கரில் உள்ள ககன்மாத் கிராமத்தில் உள்ள ககன்மாத் கோயில் பழமையான கோயிலாகும். இந்த கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்வேறு தெய்வ சிலை மற்றும் தெய்வீக மனிதர்களை சித்தரிக்கும் நுட்பமான சிற்ப வேலைப்பாடுகளுடன், அற்புதமான கட்டிடக்கலை பாணியைக் கொண்டுள்ளது. அமானுஷ்ய நிகழ்வுகளின் தலமாக கோயில் இருப்பதாகவும் நம்பப்படுகிறது.

மெஹந்திபூர் பாலாஜி கோவில் (தௌசா, ராஜஸ்தான்)

ராஜஸ்தானின் தௌசாவில் அமைந்துள்ள மெஹந்திபூர் பாலாஜி கோயில், அனுமன் தான் முதன்மை தெய்வம். தீய சக்திகளிடமிருந்தும், சூனியத்திலிருந்தும் அனுமன் பாதுகாப்பதாக நம்பப்படுகிறது. இந்த கோயில் அதன் விசித்திரமான நடைமுறைகளுக்கு பெயர் பெற்றது.

இந்த கோயிலில் பக்தர்கள் அமானுஷ்ய நிகழ்வுகளைப் பார்ப்பதாகக் கூறுகின்றனர். இந்த கோயிலுக்கு சென்றால் தீய சக்திகள் வெளியேறும் என்று நம்பப்படுகிறது. பேயோட்டும் சடங்கு இங்கு மிகவு பிரபலமாகும். இந்த கோயில் அபரிமிதமான தெய்வீக சக்தி மற்றும் ஆன்மிகப் பாதுகாப்பின் ஸ்தலம் என்று பக்தர்கள் கூறுகின்றனர். எதிர்மறை சக்திகளிடமிருந்து பாதுகாப்பு மற்றும் நல்ல ஆரோக்கியம் வேண்டி இந்த கோயிலில் பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.

Read More : 46 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட பொக்கிஷ அறை.. அதிசயங்கள் நிறைந்த பூரி ஜெகந்நாதர் கோயில்..!! இப்படி ஒரு வரலாறு இருக்கா?

English Summary

India is also home to some of the most mysterious temples. You can read about it in this post.

Rupa

Next Post

தங்கம் விலை இன்று உயர்ந்ததா? குறைந்ததா? இன்றைய நிலவரம் இதுதான்..!

Wed Dec 4 , 2024
Gold price rose today? less? Today's situation is this..!

You May Like