fbpx

ஆபரேஷன் கஞ்சா : 2000 வங்கிக் கணக்குகள் முடக்கம் …

தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட ஆபரேஷன் கஞ்சாவில் 2000 வங்கிக் கணக்குகளை காவல்துறையினர் முடக்கி உள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கஞ்சாபுழக்கம் அதிகரித்து உள்ளது. இதனால் தமிழகத்தில் ஏற்படும் குற்றங்களிலும் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதனால் போதைப் பொருள் நடமாட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வர கடந்த ஆண்டு டிசம்பரில் இருந்து ஆபரேஷன் கஞ்சா கடத்தல் மற்றும் இதை பயன்படுத்துவதற்கு எதிரான சோதனை நடத்தப்பட்டது.

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின்பேரில்இந்த வேட்டை நடத்தப்பட்டது. அதன் பின்னர் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 என்ற சோதனை மார்ச் மாதம் வரை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து போதை தரும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போல சமீபத்தில் சோதனை நடத்தப்ப்டது. இவர்களுக்கு சொந்தமான 2000 வங்கி கணக்குகளை தமிழக போலீசார் முடக்கி உள்ளனர். 2000 வங்கிக்கணக்கில் சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பில் சொத்துக்கள் , பணம் ஆகியவற்றையும் முடக்கப்பட்டுள்ளன. 

Next Post

’இனி Amazon, Flipkart-ஐ மறந்துருங்க’..!! வந்தாச்சு மத்திய அரசின் புதிய தளம்..!!

Tue Oct 4 , 2022
Amazon, Flipkart உள்ளிட்ட செயலிகளுக்கு மாற்றாக, மத்திய அரசு புதிய தளம் ஒன்றை உருவாக்கி உள்ளது. இந்தியாவில் E-commerce என அழைக்கப்படும் மின்னணு வர்த்தகமானது நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஒருபக்கம் வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கமும் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில், மத்திய அரசு ஒரு புதிய தளத்தை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் தற்போது அனைத்து பொருட்களையும் ஆன்லைன் மூலமாகவே பெரும்பாலானோர் வாங்கி வருகின்றனர். மேலும், இதற்கு Amazon, […]
அமேசான், பிளிப்கார்டில் செம ஆஃபர்..!! மிகக்குறைந்த விலையில் இப்படியும் பொருட்களை வாங்கலாமா..?

You May Like