fbpx

OPINION POLL 2024 | அதிமுக-வை ஆட்டம் காண வைத்த கருத்துக்கணிப்பு… பாஜக-விற்கு சாதகம்.! வெளியான முடிவுகள்.!

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் தேதிகள் நெருங்கி கொண்டிருக்கிறது. இன்னும் சில தினங்களில் பொதுத் தேர்தல் நடைபெறும் தேதிகள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நாள் நெருங்கி வருவதை முன்னிட்டு ஊடகங்களும் 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலைப் பற்றிய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகிறது.

பெரும்பான்மையான ஊடகங்களின் கருத்துக்கள் பாஜக மற்றும் அதன் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 150 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பதாகவே அமைந்திருக்கிறது. இந்நிலையில் டைம்ஸ் நவ் நாளிதழ் நடத்திய தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் அதிமுகவிற்கு மிகப்பெரிய இடியை இறக்குவதாக அமைந்திருக்கிறது.

2024 ஆம் வருட பொது தேர்தலை முன்னிட்டு டைம்ஸ் நவ் நாளிதழ் நடத்திய கருத்துக்கணிப்பில் பாரதிய ஜனதா கட்சி மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்று இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 258 முதல் 398 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என டைம்ஸ் நவ் நாளிதழ் வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தை பொறுத்தவரை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 29 முதல் 30 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணி தமிழகத்தில் 2 முதல் 6 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும் அந்த கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. அதிமுக 1 முதல் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என டைம்ஸ் நவ் நாளிதழ் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. இதன் மூலம் தமிழகத்தில் இரண்டாவது மிகப் பெரிய கட்சி என்ற அந்தஸ்தை அதிமுக இழக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இது அந்த கட்சிக்கு பேரிடியாக அமைந்திருக்கிறது.

Next Post

saudi: இன்றுமுதல் ரமலான் நோன்பு தொடக்கம்!… இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றாக எப்படி மாறியது?

Mon Mar 11 , 2024
Saudi: சவூதி அரேபியாவில் பிறை தென்பட்ட நிலையில் இன்று(மார்ச் 11) முதல் ரமலான் நோன்பு துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய காலண்டரின் 9வது மாதத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ரம்ஜான் பண்டிகை கொண்டாடுவதற்கு முன்பாக இஸ்லாமியர்கள் ஒரு மாத காலம் நோன்பு இருப்பார்கள். நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் அதிகாலையில் சாப்பிட்ட பின்னர் சூரியன் மறையும் வரை எதுவும் உண்ணாமல் நோன்பு இருப்பார்கள். பிறை கணக்குபடி 29 […]

You May Like