fbpx

நீட் தேர்வு எதிர்ப்பு..!! பயமா இருக்கா..? திமுகவை கடுமையாக சாடிய அண்ணாமலை..!!

நீட் தேர்வு வந்த பிறகே, அரசுப் பள்ளி மாணவர்கள் பெருமளவு பயனடைந்துள்ளனர் என்ற உண்மை வெளிப்பட்டு, திமுக உருவாக்கிய போலி பிம்பம் உடைந்துவிடும் என்ற பயமா? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதளப் பக்கத்தில், “நீட் விலக்கு என்று நாடகமாடிய திமுக, ஆட்சிக்கு வந்ததும் அதன் ஒரு பகுதியாக, முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி, திரு ஏகே ராஜன் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைத்தது. இந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கையில் உள்ள குளறுபடிகளை, தமிழக பாஜக பலமுறை சுட்டிக்காட்டியுள்ளது. நீட் வந்த பிறகு, அரசு மருத்துவக் கல்லூரிகளில், கிராமப்புற, அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க, மத்திய அரசின் பரிந்துரையின் அடிப்படையில், தீர்வு காணப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஆனால், நீட் தேர்வுக்கு முன்பு, அரசு மருத்துவக் கல்லூரிகளில், அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை விவரங்களை பலமுறை வலியுறுத்தியும், திமுக அரசு அமைத்த இந்தக் குழு வழங்க மறுப்பது ஏன்? முழுமையான விவரங்கள் இல்லாத ஒரு அறிக்கையை வைத்து, திமுக நீட் எதிர்ப்பு நாடகத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பதன் மர்மம் என்ன? நீட் தேர்வுக்கு முன்பாக, எத்தனை அரசுப் பள்ளி மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் கல்வி இடம் பெற்றனர்? இந்த உண்மையைக் கூறினால், நீட் தேர்வு வந்த பிறகே, அரசுப் பள்ளி மாணவர்கள் பெருமளவு பயனடைந்துள்ளனர் என்ற உண்மை வெளிப்பட்டு, திமுக உருவாக்கிய போலி பிம்பம் உடைந்துவிடும் என்ற பயமா? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Read More : BREAKING | நீட் தேர்வுக்கு என்னதான் தீர்வு..? யோசனை சொன்ன தவெக தலைவர் விஜய்..!!

English Summary

Is it the fear that only after the NEET exam, the fact that government school students have benefited will come out and the fake image created by DMK will be broken? Annamalai has questioned.

Chella

Next Post

’மக்களே நம்புங்க’..!! ’அவுங்க என் பொண்டாட்டி இல்ல’..!! அம்பிகா உடனான உறவு குறித்து உண்மையை போட்டுடைத்த பிரபலம்..!!

Wed Jul 3 , 2024
There were reports that I am Ambika's husband. Ambika and I have acted as husband and wife in almost 16 films in 4 languages.

You May Like