fbpx

ரஷ்யாவில் படைகளை அணிதிரட்ட எதிர்ப்பு; புதினுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் தீவிரம்…!!

உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷியாவில் படைகளை அணி திரட்ட அந்நாட்டு அதிபர் புதின் உத்தரவிட்டார். அதற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டம் நடத்தியவர்களில் 730 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைனுக்கு எதிராக போரிட படைகளை திரட்ட புதின் உத்தரவிட்டார். இந்நிலையில், ராணுவ ஆட்சேர்ப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது. போரில் கலந்து கொள்ள விருப்பமில்லை என கூறி ஏராளமான ரஷியர்கள் வெளிநாடு தப்பிச் செல்கின்றனர். மேலும் ஆங்காங்கே படை திரட்டலுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன.

அந்த வகையில், 32 நகரங்களில் புதினுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில், அனுமதியின்றி போராட்டம் நடத்திய 730 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Rupa

Next Post

விடுதி பெண்கள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்து ஆண் நண்பருக்கு பகிர்ந்த பெண்..!! மதுரையில் பகீர் சம்பவம்..!!

Sun Sep 25 , 2022
மதுரையில் பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்து, அதை ஆண் நண்பருக்கு அனுப்பிய விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்தவர் ஆசிக் (வயது 31). இவர் MBBS படித்து முடித்துவிட்டு கமுதியில் கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார். ஆசிக்கிற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், இவரது கிளினிக் அருகேயுள்ள காளீஸ்வரி என்பவர் மதுரை அண்ணாநகரில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கி, பி.எட்., படித்து […]
விடுதி பெண்கள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்து ஆண் நண்பருக்கு பகிர்ந்த பெண்..!! மதுரையில் பகீர் சம்பவம்..!!

You May Like