மீண்டும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற ஓபிஎஸ் விடுத்த அழைப்பை இபிஎஸ் தரப்பு நிராகரித்துள்ளது..
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ அதிமுக ஆட்சிகாலத்தில் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா இருவரும் எண்ணற்ற நலத்திட்டங்களை வழங்கி உள்ளனர்.. தமிழகத்தின் பிரதான கட்சியாக செல்வாக்கு பெற்றுள்ளது.. ஜெயலலிதா மறைவுக்கு கட்சி இரண்டாக பிரிந்தது.. மீண்டும் நானும் அண்ணன் ஓபிஎஸ்-ம் இணைந்தோம்.. 2017-ல் நடந்த பொதுக்குழுவில் இணை ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் உருவாக்கப்பட்டது.. இதற்காக அதிமுக சட்ட விதிகளில் திருத்தம் கொள்ளப்பட்டது..
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டன.. அதிமுகவை தன்வசம் கொண்டு போக நினைப்பதே இன்றைய நிலைக்கு காரணம்.. ஒற்றை தலைமை வேண்டும் என்று கழக நிர்வாகிகள், தொண்டர்கள் தெரிவித்திருந்தனர்.. எனினும் ஒற்றை தலைமைக்கு இதுகுறித்து ஆலோசனை நடைபெற்ற நிலையில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.. ஒற்றை தலைமை குறித்து பொதுக்குழுவில் விவாதிக்கப்பட இருந்த நிலையில் ஓபிஎஸ் நீதிமன்றத்தில் முறையிட்டார்.. அது எந்த விதத்தில் நியாயம்..?.” என்று தெரிவித்தார்..
இதையடுத்து மீண்டும் இணைந்து செயல்படலாம் என்று ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த இபிஎஸ் “ அவர் அடிக்கடி அழைப்பு விடுப்பார்.. யாரை எதிர்த்து தர்ம யுத்தம் செய்தாரோ அவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.. அவருக்கு பதவி வேண்டும்.. பதவி இல்லாமல் இருக்க முடியாது.. யார் எப்படி போனாலும் அவருக்கு கவலை இல்லை.. ஓபிஎஸ் பதவிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்.. ஓபிஎஸ்-இடம் உழைப்பு கிடையாது.. ஆனால் பதவி வேண்டும்.. எதை மனதில் வைத்து மீண்டும் இணைய வேண்டும் என்று ஓபிஎஸ் சொல்கிறார்..? எப்படி இணைய முடியும்..? தலைமையில் இருப்பவரே அதிமுக தலைமை அலுவலகத்தையும், எங்கள் தரப்பினரையும் தாக்கினார்.. அவருடன் எப்படி ஒத்துப் போக முடியும்..? கட்சியில் தொடர்ந்து பிரச்சனை செய்து கொண்டிருந்தால் மக்கள் எப்படி அதிமுகவை ஏற்றுக் கொள்வார்கள்..? நான் எப்போதும் எந்த பதவிக்கும் ஆசைப்படவில்லை.. படிப்படியாக முன்னேறி இந்த நிலைக்கு வந்துள்ளேன்..” என்று தெரிவித்தார்..