fbpx

’ஆளாக்கிய அன்னையை இழந்து தவிக்கும் ஓபிஎஸ்’..!! ஆறுதல் கூறிய முதலமைச்சர் முக.ஸ்டாலின்..!

ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் உடல்நலக்குறைவால் காலமான நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக கடந்த ஒரு சில வாரங்களாகவே தேனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்காததால் நேற்று இரவு வீட்டிற்கு திரும்பி அனுப்பப்பட்டார். இந்நிலையில், பெரியகுளம் தென்கரை அக்ரஹாரத்தில் உள்ள அவரது வீட்டில் இரவு 10 மணியளவில் பழனியம்மாளின் உயிர் பிரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும், சென்னையில் இருந்த ஓபிஎஸ், பெரியகுளத்தில் விரைந்தார்.

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் மறைவுக்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவெய்திய செய்தி கேட்டு வேதனை அடைந்ததாக தெரிவித்துள்ளார். ஆளாக்கிய அன்னையை இழந்து தவிக்கும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு, தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாகவும் பதிவிட்டுள்ளார்.

Chella

Next Post

”அடிக்கடி வந்ததால ஆசை வந்துருச்சு”..!! மசாஜ் சென்டர் பணிப்பெண்ணை கதறவிட்ட நபர்..!! 21 வயது இளம்பெண் பலாத்காரம்..!!

Sat Feb 25 , 2023
கர்நாடக மாநிலம் பெங்களூரு ஜெயநகர் பகுதியில் செயல்பட்டு வரும் மசாஜ் சென்டரில் 21 வயது இளம்பெண் ஒருவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த மசாஜ் சென்டரின் பெண் உரிமையாளருக்கும், ரவீந்திர ஷெட்டி (42) என்பவருக்கும் இடையே நட்பு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக, மசாஜ் சென்டருக்கு ரவீந்திர ஷெட்டி அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்படி சம்பவத்தன்று மசாஜ் சென்டருக்கு ரவீந்திர ஷெட்டி வரும்போது, அந்த பெண் உரிமையாளர் இல்லை. அந்த 21 […]

You May Like