அதிமுக சின்னம் மற்றும் கொடியை ஓபிஎஸ் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. அதிமுக இரட்டை இலை சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் முறையிட்டுள்ளார். அதாவது வேட்புமனுவில், வேட்பாளர்களை அங்கீகரித்தும், சின்னத்தை அங்கீகரித்தும் கையெழுத்திட அதிகாரம் வழங்க வேண்டுமென ஓபிஎஸ் கோரிக்கை வைத்துள்ளார். அதிகாரம் வழங்காவிடில் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்து பொது சின்னத்தை வழங்க ஓபிஎஸ் மனு அளித்துள்ளார்.