தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வசித்து வரும் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் ஓ.பழனியம்மாள் (95) வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்த அழுத்தம் குறைந்ததன் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனை அறிந்த ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனை சென்று தாயின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். கடந்த மாதம் 5ஆம் தேதி பழனியம்மாள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 3 நாட்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில், நேற்றிரவு மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததால் சோகத்தில் இருக்கும் ஓபிஎஸ், தற்போது அவரது தாயாரின் இந்த நிலைமையை பார்த்து மேலும் சோகத்தில் உள்ளார்.