fbpx

OPS | எடப்பாடி பழனிசாமிக்கு புதிய சிக்கல்..!! தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மீண்டும் பரபரப்பு புகார்..!!

இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றைப் பயன்படுத்த கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக் கோரி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் கடந்தாண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றைப் பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு நிரந்தர தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதற்கிடையே, ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் தனக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க வேண்டும் என ஓபிஎஸ், தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தார். மேலும், தனக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படாவிட்டால், அந்த சின்னத்தை முடக்குமாறும் கூறியிருந்தார். ஆனால், ஓ.பன்னீர்செல்வத்தின் மனுவை நிராகரித்த தேர்தல் ஆணையம், எடப்பாடி பழனிசாமியின் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ், மீண்டும் ஒரு மனு அளித்துள்ளார். அந்த மனுவில், “அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள் இருவரும் கையெழுத்திட வேண்டும். அத்தகைய Specimen தான் ஏற்கனவே ஆணையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. எனது, கையெழுத்து இல்லாத மனுவை ஏற்பது சட்ட விரோதம்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவுக்கு தேர்தல் ஆணையம் விரைவில் பதிலளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : Election: வேட்புமனுக்களை திரும்பப் பெற இன்றே கடைசி நாள்!… இறுதி வேட்பாளர் பட்டியல் மாலை 5 மணிக்கு வெளியீடு!

Chella

Next Post

Rain | மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்..!! ஏப்ரல் 2ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் வெளுத்து வாங்கப்போகும் மழை..!!

Sat Mar 30 , 2024
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் தீவிரமாக இருக்கும் நிலையில், அடுத்த மாதம் தொடக்கத்தில் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்தாண்டு தொடங்கிய பருவமழை, இந்தாண்டு ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகையுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு தீவிரமாக இருந்தது. சில நாட்களில், காலை 10 மணி வரை கூட பனி மூட்டம் பல பகுதிகளில் இருந்து வந்தது. […]

You May Like