fbpx

சசிகலாவுடன் ஓபிஎஸ் ஆதரவாளர் திடீர் சந்திப்பு..! தன்னை காப்பாற்றிக்கொள்ள ரகசிய உடன்பாடு..! பரபரப்பு

சசிகலாவும் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கமும் சந்தித்துப் பேசிக் கொண்ட சம்பவம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே காவாரப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் சசிகலா மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் எம்.எல்.ஏ. வைத்திலிங்கம் ஆகியோர் சந்தித்துக் கொண்டனர். அதிமுக விவகாரம் பரபரப்பாக பேசப்படும் சூழ்நிலையில், இன்று சசிகலாவும், வைத்திலிங்கமும் சந்தித்து பேசிக்கொண்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த சந்திப்பு தற்செயலாக நடந்ததாக வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

சசிகலாவுடன் ஓபிஎஸ் ஆதரவாளர் திடீர் சந்திப்பு..! தன்னை காப்பாற்றிக்கொள்ள ரகசிய உடன்பாடு..! பரபரப்பு

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம், “சசிகலாவை எதேச்சையாக சந்தித்தேன். அரசியல் ரீதியாக சந்திக்கவில்லை. அதிமுகவில் ஒற்றுமை தேவை. அனைவரும் ஒன்றினைந்து செயல்பட வேண்டும். தன்னை காப்பாற்றிக்கொள்ள யாருடனோ ரகசிய உடன்பாடு வைத்துக் கொண்டு எடப்பாடி பழனிசாமி அதிமுகவை அழிக்க பார்க்கிறார்” என்று குற்றம்சாட்டினார்.

Chella

Next Post

செப்டம்பர் 12-ம் தேதி பூமியை நோக்கி வரும் மிகப்பெரிய விண்கல்.. நாசா எச்சரிக்கை..

Fri Sep 9 , 2022
பூமிக்கு அருகில் விண்கற்கள் கடந்து செல்வது வழக்கமாக நடக்கும் நிகழ்வு தான்.. ஒரு விண்கல் அல்லது சிறு கோள் என்பது சூரிய குடும்பம் பிறக்கும்போது முழுமையாக உருவாகாத ஒரு சிறிய கிரகம். சூரியனை சுற்றி மில்லியன் கணக்கான சிறுகோள்கள் வலம் வருகின்றன. பெரும்பாலானவை செவ்வாய் மற்றும் வியாழனின் சுற்றுப்பாதைகளுக்கு இடையிலான ஒரு பகுதி முக்கிய சிறுகோள் இருந்தாலும், அவை ஒரே அளவிலும் வடிவத்திலும் இல்லை.. ஏனெனில் அவை சூரியனில் இருந்து […]

You May Like