fbpx

ஓ.பி.எஸ். ஆதரவாளர் திடீர் விலகல் …. அதிர்ச்சியில் ஓ.பி.எஸ். ..

அரசியலை விட்டு ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் விலகுவதாக வெளியிட்டுள்ள அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

அதிமுகவில் இருந்து வெளிவரும் நமது எம்.ஜி.ஆர் . என்ற நாளிதழின் ஆசிரியராக பணியாற்றியவர் மருது அழகுராஜ். ஜெயலலிதாவின் மறைவை அடுத்து சசிகலாவின் கைக்கு நிர்வாகம் சென்றது. இதைப் பற்றி விமர்சனம் செய்ததை அடுத்து அவர் வெளியேற்றப்பட்டார்.
பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் வசம் அதிமுக சென்றதும் நமது அம்மா என்ற நாளிதழ் தொடங்கப்பட்டது. இதில் மருது அழகுராஜ் செய்திப்பிரிவு ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டார்.
கடந்த 2012ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிருவதற்கும் வாயப்பு அளிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார்.
அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை மோதல் வெடித்துள்ள நிலையில் நாளிதழின் நிறுவன பொறுப்பில் இருந்து பன்னீர் செல்வத்தின் பெயர் நீக்கப்பட்டது. இதில் தான் நமது அம்மா நாளிதழ் ஆசிரியராக மருது அழகுராஜ் பொறுப்பில் இருந்தார்.
இவர் பன்னீர் செல்வத்தின் ஆதரவாளராக இருந்தார். எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு விமர்சனங்களை முன் வைத்தார் கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி விரைவில் சிறைக்கு செல்வார் என கூறி வந்தார்.
கொடநாடு கொலை வழக்கில் தனிப்படை காவல்துறையினர் விசாரணைக்கு இவர் ஆஜராகி பல்வேறு ரகசிய தகவல்களை தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் ஓ.பி.எஸ். ஆதரவாளராக இருநு்து வந்த மருது அழகுராஜ் தற்போது அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் எழுத்து மற்ம் பேச்சு அரசியல் நடவடிக்கைகளில் இருந்து முற்றிலுமாக என்னை விடுவித்துக் கொள்கின்றேன். இதுவரை முதுகைத்தட்டிக் கொடுத்தவர்களுக்கு நன்றி, என் கருத்துக்களால் யாராவது காயப்பட்டிருநு்தால் அதற்காக நான் வருந்துகின்றேன். என பதவிட்டுள்ளார். இதனால் ஓ.பி.எஸ். உள்பட பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

5

Next Post

அரசியல்வாதி என்ற போர்வையில் மக்களை ஏமாற்றும் விக்ரமன்... கிழித்தெடுத்த அசீம்....

Sat Oct 22 , 2022
தமிழில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி 13 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம், அசல் கொலார், ராபர்ட், ஷெரினா, ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி, சிவின் கணேசன் மற்றும் நிவாஷினி என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். பொதுவாகவே நிகழ்ச்சி […]

You May Like