fbpx

பழுதான பள்ளி கட்டிடங்களை இடித்து தரைமட்டமாக்க உத்தரவு..!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி..!!

அரசு மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளில் ஒருங்கிணைந்த கல்வி இன்ஜினியர்களால் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளின் படி, பள்ளிகளில் பழுதடைந்த, இடிக்கப்பட வேண்டிய வகுப்பறைகள், கழிவறைகள் மற்றும் இதர கட்டிட விவரங்கள் கண்டறியப்பட்டு அவை டி.என்.எஸ்.இ.டி. அட்மினிஸ்ட்ரேட்டர்ஸ் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக பழுதடைந்த கட்டிடங்களை இடிக்க வேண்டிய பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த பணிகளின் தற்போதைய நிலையை அறிந்து கொள்ளவும், அதனடிப்படையில், தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக, தலைமை ஆசிரியர்கள் கள ஆய்வின் அடிப்படையில் கண்டறியப்பட்ட இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்களின் விவரங்களை பார்த்து அதில் அந்த கட்டிடம் இடிக்கப்பட்டதா? இடிக்கப்பட்டு அகற்றப்பட்டதா? என்ற விவரங்களையும், அதற்குரிய புகைப்படங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக ஏதேனும் கட்டிடங்கள் இடிக்க வேண்டிய நிலையில் இருந்தால், அதுபற்றிய விவரங்களையும் பதிவேற்றம் செய்யலாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை தலைமை ஆசிரியர்கள் துரிதமாக செய்து முடிக்க, அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

Chella

Next Post

தங்கம் வாங்க சரியான நேரம்..!! அதிரடியாக குறைந்த விலை..!! படையெடுக்கும் மக்கள்..!!

Wed Jan 17 , 2024
கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வந்த தங்கத்தின் விலை இன்று அதிரடியாக ரூ.320 குறைந்துள்ளது. இது நகைப்பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.46,480 ஆக விற்பனையாகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.5,810 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,240 […]

You May Like