fbpx

’பட்டா நிலத்தில் புதைக்கப்பட்ட பிணத்தை மீண்டும் தோண்டி எடுக்க உத்தரவு’..!! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..!!

தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தின்படி, பட்டா நிலத்தை மயானமாக பயன்படுத்த முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் நொச்சிலி கிராமத்தைச் சேர்ந்த பாபு நாயுடு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், தங்களது கிராமத்தில் மயானம் உள்ள நிலையில், ஜெகதீஷ்வரி என்பவர் இறந்த தனது கணவரின் உடலை சட்ட விரோதமாகப் பட்டா நிலத்தில் புதைத்தாக குற்றச்சாட்டு வைத்திருந்தார். எனவே, பட்டா நிலத்தில் புதைக்கப்பட்ட அந்த உடலை தோண்டி எடுத்து, மயானத்திலேயே புதைக்க ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு, நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது உடல் புதைக்கப்பட்ட நிலம் மனுதாரருக்கு சொந்தமானது அல்ல எனவும், நிலத்தின் உரிமையாளரின் அனுமதியோடு தான் உடல் புதைக்கப்பட்டதாகவும் ஜெகதீஷ்வரி தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

இந்நிலையில், உடலை புதைக்க நிலத்தின் உரிமையாளர் அனுமதி அளித்தாலும் கூட, பஞ்சாயத்து சட்டப்படி பட்டா நிலத்தில் உடலைப் புதைக்க முடியாது என நீதிபதி உத்தரவிட்டார். மேலும், கிராமத்தில் மயானம் இல்லை என்றால், அரசு நிலத்தை கண்டறிந்து மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன் தான் அந்த நிலத்தை மயானமாகப் பயன்படுத்த முடியும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜெகதீஷ்வரி கணவரின் உடலை தோண்டி எடுத்து மயானத்தில் அடக்கம் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, இந்த நடவடிக்கைக்காகப் பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கும் உத்தரவிட்டார்.

Chella

Next Post

’இந்த கால தலைமுறையை நினைத்து வருத்தமாக இருக்கிறது’..!! பரபரப்பு வீடியோவை வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்..!!

Sun May 7 , 2023
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் இந்தாண்டு சிம்புவின் பத்து தல, இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2 ஆகிய படங்கள் வெளியாகின. மேலும் அயலான், மாமன்னன், ஆடுஜீவிதம் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. சமீப காலமாக ஏ.ஆர்.ரஹ்மான் சமூக பிரச்சனைகள் குறித்து கருத்து தெரிவித்து வருகிறார். அந்த வகையில், ஏஐ (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் மாற்றம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த […]

You May Like