fbpx

மாணவர்கள் செலுத்திய அனைத்து கட்டணத்தையும் முழுமையாக திருப்பித் தர யுஜிசி உத்தரவு..!

மாணவர்கள் சேர்க்கையை ரத்து செய்தால் அவர்கள் செலுத்திய அனைத்து கட்டணத்தையும், முழுவதுமாக திருப்பி அளிக்க வேண்டும் என உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ஏற்கனவே சேர்ந்துள்ள மாணவர்கள் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் பாதியிலேயே வெளியேறும் பட்சத்தில், அவர்கள் செலுத்திய முழு கட்டணத்தையும் திருப்பித்தர வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவு பிறப்பித்துள்ளது. பொதுநுழைவுத் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள் பலர், முன்னெச்சரிக்கையாக வேறு உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். அவர்களின் நலன் கருதி யுஜிசி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு, யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாணவர்கள் செலுத்திய அனைத்து கட்டணத்தையும் முழுமையாக திருப்பித் தர உத்தரவு..!

சேர்க்கையை ரத்து செய்தால் அவர்கள் செலுத்திய அனைத்து கட்டணத்தையும், முழுவதுமாக திருப்பி அளிக்க வேண்டும் என்றும் சேர்க்கையை ரத்து செய்வதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மாணவர்கள் வேறு கல்லூரிகளில் சேர்வதற்காக இடைநின்றால் கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் சேர்க்கைக் கட்டணத்தை ரத்து செய்வதற்கு தனியாகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

இன்று பூமியை தாக்க உள்ள புவி காந்தப் புயல்... இந்த பாதிப்பு ஏற்படலாம்..

Wed Aug 3 , 2022
சூரியனின் மேற்பரப்பில் உள்ள துளையிலிருந்து வெளியேறும் அதிவேக சூரியக் காற்று இன்று (ஆகஸ்ட் 3) பூமியில் சிறிய அளவிலான புவி காந்தப் புயல் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது. சூரியனின் வளிமண்டலத்தில் உள்ள தெற்கு துளையிலிருந்து இந்த சூரிய காற்று வெளியேறுவதால், இந்த காந்த புயல் ஏற்பட வாய்ப்புள்ளதாக தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். சூரியனின் வடகிழக்கு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெடிப்பு ஏற்பட்டதை பூமியைச் சுற்றிவரும் […]

You May Like