தமிழ்நாட்டில் நேற்று நடந்து முடிந்த மக்களவை தேர்தலையொட்டி பிரியாணி மாஸ்டர்களுக்கு உணவு ஆர்டர் இருந்து கொண்டே இருந்ததால் அவர்கள் ஓய்வே இல்லாமல் பிஸியாகவே இருந்தனர்.
தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் 69 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. கடந்த 2019 லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகளை காட்டிலும் இந்த முறை குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளது. தமிழகத்தில் 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப் பதிவு நடந்ததாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலையொட்டி வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்குப்பதிவு முடிந்தவுடன் அந்த வாக்குப் பதிவு இயந்திரங்களை வாகனத்தில் பாதுகாப்பாக ஏற்றி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களுக்கு அனுப்ப வேண்டும். அதுவரை பூத் ஏஜென்டுகள் வாக்குச் சாவடிகளை விட்டு வெளியேற கூடாது. இதனால் பூத் ஏஜென்டுகள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள். தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கும் அவ்வப்போது தேவையான உணவு, தண்ணீர் பாட்டில்களை அரசியல் கட்சியினர் வழங்கி வந்தனர்.
பூத் ஏஜென்ட்களின் பங்கு அளப்பரியது. அது போல் தொகுதியில் மற்ற கட்சியினரால் பிரச்சனை ஏற்படாமல் இருக்க, பூத்தில் இருந்து குறிப்பிட்ட தொலைவில் ஒவ்வொரு கட்சியின் தொண்டர்களும் காத்திருப்பார்கள். இவர்களுக்கு சுடச்சுட பிரியாணியை அந்தந்த கட்சியின் வேட்பாளர்கள் வழங்கினர். இதற்காக ஓட்டல்களை நாடாமல் தனியாகவே சமையல் கலைஞர்களை வைத்து தனியார் இடத்தில் சமைத்து அவை பார்சல் செய்யப்பட்டு நேற்று மதியம் அவர்களுக்கு உணவாக வழங்கப்பட்டது.
சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, குஷ்கா என பூத்தை சுற்றி பிரியாணி வாடையே இருந்தது. மேலும், சில அரசியல் கட்சியினர் ஹோட்டல்களில் கூட பிரியாணிகளுக்கு ஆர்டர் கொடுத்திருந்தனர். இதனால் ஹோட்டல்களில் உள்ள பிரியாணி மாஸ்டர்களும் பிஸியாகவே இருந்தனர். அண்டா அண்டாவாக பிரியாணியை சமைப்பதும் அதை பார்சல் கட்டுவதும், அது காலியானால் மீண்டும் ஒரு அண்டாவில் பிரியாணியை தயார் செய்வதுமாக இருந்தனர். சுருக்கமாக சொன்னால் மாநாடு படத்தில் எஸ்.ஜே.சூர்யா சொல்வது போல் ஆர்டர், பிரியாணி, பார்சல் ரிப்பீட்டு என்றுதான் இருந்தது..!!
Read More : ’எவன் கூட தொடர்புல இருக்க’..!! மனைவியை அடித்தே கொன்ற கணவன்..!! கடைசியில் ட்விஸ்ட்..!!