fbpx

தொடர் புகார்… கோடை விடுமுறையில் வகுப்பு நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு…!

நடப்பு கோடை விடுமுறையில் சில தனியார் பள்ளிகள் வகுப்புகள் நடத்துவதாக பள்ளிக் கல்வித்துறைக்கு புகார் தொடர்ச்சியாக வருகிறது. விதிகளை மீறி வகுப்பு நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒரு சில நகர தனியார் மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மாணவர்களுக்கு குறிப்பாக மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்துவதாக பல புகார்கள் வந்துள்ளதாக கல்வித்துறையின் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 24 முதல் அனைத்து தமிழகப் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை வழங்கப்பட்டு பள்ளிகள் மூடப்பட்டன. இருப்பினும், ஜூன் 4-ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் எண்ணிக்கை காரணமாக, பள்ளிகள் திறக்கும் தேதி ஒத்திவைக்க படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனரகம் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் ; தனியார் மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை நடத்துவது தொடர்ந்தாள் ன கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசு அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அறிவித்த பிறகும், பல்வேறு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவது குறித்து தொடர்ந்து புகார்கள் வருகின்றன.

இந்த கடுமையான வெயில் காலத்திலும், பள்ளிகள் மூடப்படும் காலத்திலும் சிறப்பு வகுப்புகளை கட்டாயமாக நடத்தக்கூடாது என்று பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

அதிரடியாக வந்த உத்தரவு...! ரேஷன் கடையில் பொருட்கள் இல்லை என்று சொல்ல கூடாது...!

Sun May 5 , 2024
ரேஷன் கடைக்கு வரும் மக்களுக்கு பொருட்கள் இல்லை என்று சொல்லாமல் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், ரேஷன் கடைக்கு வரும் மக்களுக்கு பொருட்கள் இல்லை என்று சொல்லாமல் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொருட்கள் இல்லை என்று அலைக்கழிக்கும் கடைகள் மீது 1800 599 5950 என்ற இலவச எண்ணில் புகார் அளிக்கலாம் என தமிழ்நாடு […]

You May Like