fbpx

உறுப்பு தானம் செய்யும் தியாகிகளுக்கு, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு… முதல்வர் ஸ்டாலின்..

நமக்கு நெருங்கிய ஒருவரின் மரணம் என்பது யாராலும் தாங்கிக் கொள்ள முடியாத ஒன்று. ஆனால் அந்த நேரத்திலும் யார் என்று தெரியாத ஒருவரை காப்பாற்ற உறுப்புகளை தானமாக தர முன்வருவது சாதாரண விஷயம் இல்லை. இந்நிலையில், தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

உடல் உறுப்பு தான திட்டம் கடந்த 2007-2008-ம் ஆண்டில் கருணாநிதியால் கொண்டு வரப்பட்டது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 13 மருத்துவமனைகளில் மட்டுமே உடல் உறுப்பு தானம் பெறக்கூடிய நிலை இருந்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் உடல் உறுப்பு தானம் பெறக்கூடிய வகையில் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் மா.சுப்ரமணியன் “உலகிலேயே உடல் உறுப்புகள் தானம் செய்வதில் தமிழகம் தான் முதல் இடத்தில் உள்ளது” என்று கூறியிருந்தார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் சமூகவலைத்தளப்பக்கத்தில், “உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது. குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால் தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது.

“தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Maha

Next Post

"என்ன விட்டுரு மா, வலி தாங்க முடியல" கதறிய மூதாட்டி; நெஞ்சை நொறுக்கும் வீடியோ..

Sat Sep 23 , 2023
மாமியார் மருமகளை கொடுமை செய்வதை பற்றி பலர் பேசுவது உண்டு. மாமியாரால் பல மருமகள்கள் வேதனையில் வாழ்வது உண்மை தான். ஆனால், மருமகளால் மாமியார் படும் வேதனையை பற்றி பலர் பேசுவது இல்லை. வயதான காலத்தில் எழுந்து நிற்க கூட தெம்பு இல்லாமல் மருமகளிடம் சித்ரவதை அனுபவிக்கும் மாமியார்கள் அநேகர். அந்த வகையில் தெலுங்கானா மாநிலத்தில் மருமகளால் மாமியார் படும் வேதனை கல்நெஞ்சங்களையும் கரைய செய்துள்ளது. ஆம், தெலுங்கானா மாநிலத்தில் […]

You May Like