fbpx

Oscars 2024: விருது வழங்க நிர்வாணமாக சென்ற ஜான் சினா!… வைரலாகும் வீடியோ!

Oscars 2024: ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த ஆடைக்கான விருதை பிரபல மல்யுத்த வீரரான ஜான் சினா ஆடையின்றி நிர்வாணமாக வந்து அறிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உலகளவில் மிகவும் முக்கியமான சினிமா விருது விழாவாக ஆஸ்கர் கருதப்பட்டு வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் 96 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆஸ்கர் நிகழ்ச்சியை 4வது முறையாக ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த முறை 13 பிரிவுகளில் ஓபன்ஹெய்மர் படம் போட்டியிட்டு வருகிறது. அதனை தொடர்ந்து பார்பி திரைப்படம் 8 படங்களிலும், புவர் திங்ஸ், ஃபால் ஆஃப் அனாடமி, மேஸ்ட்ரோ, கில்லர்ஸ் ஆஃப் தி ஃபிளவர் மூன் உள்ளிட்ட பல படங்கள் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளன. இதில், சிறந்த ஆடை வடிவமைப்பாளர்களுக்கான ஆஸ்கர் விருது புவர் திங்ஸ் திரைப்படத்திற்கு கிடைத்தது. அப்படத்திற்கு ஆடை வடிவமைப்பு செய்த ஹோலி வேடின்சன் அந்த விருதை பெற்றுக்கொண்டார்.

இந்தநிலையில், சிறந்த ஆடைக்கான விருதை அறிவிக்க பிரபல மல்யுத்த வீரரும்( WWE), நடிகருமான ஜான் சீனா ( John Cena), ஆடையின்றி நிர்வாணமாக வந்துள்ளார். இதையடுத்து, விருது அறிவிக்கப்பட்ட பிறகு, ஜான்சினா ஒரு திரை ஆடையால் உடலை மறைத்துக்கொண்டார். இதனை பார்த்த மார்கட் ராபியின் ரியாக்‌ஷனை கேப்சர் செய்து ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Readmore: TNPSC குரூப் 4 தேர்வு..!! 6,244 காலிப்பணியிடங்கள்..!! 20,37,094 பேர் விண்ணப்பம்..!!

Kokila

Next Post

முடிவுக்கு வருகிறது FASTag!… கணக்கை உடனடியாக மூட பேடிஎம் அறிவுறுத்தல்!

Mon Mar 11 , 2024
FASTag: புதிய சேவையை பெறவேண்டுமானால் உடனடியாக FASTag கணக்கை மூட வேண்டும் என்று பேடிஎம் அறிவுறுத்தியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) Paytm Payments செயல்பாட்டை முற்றிலும் தடை செய்திருக்கிறது. வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949 ன் பிரிவு 35A இன் கீழ் அதன் அதிகார வரம்பிற்கு ஏற்ப, Paytm Payments Bank (PPBL) புதிய வாடிக்கையாளர்களை ஏற்றுக்கொள்வதை ஆர்பிஐ தடை செய்துள்ளது. மேலும், மார்ச் 15, 2024க்குப் பிறகு […]

You May Like