கால்சியம் மற்றும் பிற எலும்பு தாதுக்களின் இழப்பால் உண்டாகும் நிலை ஆஸ்டியோபோரோசிஸ். எலும்பு அடர்த்தி குறைவதன் காரணமாக எலும்புகள் உடைந்து சுருங்குகிறது. இது இருபாலரையும் தாக்கும் என்றாலும் குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களை அதிகம் பாதிக்கின்றன. ஆண்களை விட பெண்களின் எலும்பு ஏன் பலவீனமாக இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வோம்.
பெண்களுக்கு 50 வயதுக்கும் மேல் எலும்பு பலவீனமாக காரணமே ஈஸ்ட்ரோஜன் குறைபாடு தான். பெண்களுக்கு மாதவிடாய் நின்ற காலத்தில் ஈஸ்ட்ரோஜன் உற்பத்தி குறைகிறது. அப்போது எலும்பின் அடர்த்தியும் குறைகிறது. பெண்கள் 50 வயதுக்கு பிறகு வேகமாக எலும்பு இழக்க காரணம் இதுதான். அதனால் தான் ஆண்களை விட பெண்கள் இந்த ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தை பெறுகின்றனர்.
ஓரே எடை மற்றும் உயரமுள்ள ஆன் மற்றும் பெண்களை பரிசோதித்தால் பெண்களை விட ஆண்களுக்கு எலும்பு அடர்த்தி அதிகமாக இருக்கும். ஏனென்றால் ஆண்களை விட பெண்களே மரபணு ரீதியாக மெல்லிய எலும்புகள் கொண்டிருக்கிறார்கள். பருவமடைவதற்கு முன்பு ஆண், பெண் இருவருக்கும் எலும்பு நிறை ஒரே விகிதத்தில் இருக்கும். ஆனால் பருவமடைந்த பிறகு, ஆண்களுக்கு பெண்களை விட எலும்பு நிறை அதிகமாக இருக்கும். இதனாலும் கூட பெண்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் உண்டாகலாம்.
கர்ப்பத்துக்கு பிறகு தாய்ப்பாலூட்டுவது வளரும் குழந்தை ஆரோக்கியமான எலும்புகளை உருவாக்க பயன்படுத்தும். அப்போது கால்சியம் மற்றும் வைட்டமின் டி கர்ப்பிணிகள் உணவில் கூடுதலாக சேர்க்க வேண்டும். உணவில் இருந்து போதுமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கிடைக்கவில்லை எனில் கர்ப்பிணியின் உடல் எலும்புகளில் இருந்து கால்சியத்தை எடுத்துகொள்கிறது. ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு பிரசவத்துக்கு பிறகு மீண்டும் எலும்பு வலுவடையும். வலுவான எலும்பு ஆரோக்கியம் இருந்தால் நீண்ட காலம் ஆஸ்டியோபோரோசிஸிலிருந்து பாதுகாக்கலாம்.
45-50 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் ஆஸ்டியோபோரோசிஸ் தடுக்க, வழக்கமான எலும்பு பரிசோதனை மற்றும் எலும்பு அடர்த்தி அளவீடு சோதனைகள் செய்ய வேண்டும். மருத்துவரின் ஆலோசனையை பிணற்றுவதன் மூலம் இதை இலிருந்து மீளலாம்.
மேலும் இதை தடுக்க உடல் பயிற்சி அவசியம். கால்சியம் நிறைந்த உணவுகளான பால் மற்றும் பால் பொருள்கள், சோயா பானங்கள், பச்சை இலை காய்கறிகள், உலர்ந்த பட்டாணி, பீன்ஸ் மற்றும் மீன் போன்றவற்றை எடுத்துகொள்வது நல்லது.