fbpx

’ஐய்யோ’..!! ’மொத்த சொத்தும் போச்சே’..!! பதறியடித்து போலீசிடம் ஓடிய பிரபல நடிகை கௌதமி..!! நடந்தது என்ன..?

ஆந்திராவில் பிறந்து கோலிவுட் உலகில் டாப் நடிகையாக திகழ்ந்தவர் தான் கௌதமி. 1987இல் ஒரு சில கன்னட மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய இவர், 1988இல் எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “குரு சிஷ்யன்” திரைப்படத்தில் கீதா என்ற கதாபாத்திரத்தில் தமிழில் அறிமுகமானார்.

அன்று தொடங்கி சுமார் 10 ஆண்டுகள் பல்வேறு திரை துறையில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார் கௌதமி. ஆனால், 1998-க்கு பிறகு பெரிய அளவில் திரைப்படங்களில் நடிக்காத கௌதமி தற்பொழுது துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இவரின் மகள் போட்டோக்கள் தொடர்ந்து இணையத்தில் வைரலாகி வருவதுண்டு.

இந்நிலையில், நடிகை கௌதமி தற்போது காவல்துறையில் ஒரு அதிர்ச்சி புகாரை கூறியிருக்கிறார். அழகப்பன் என்பவருக்கு தனது சொத்துக்களை விற்க பவர் கொடுத்து இருந்ததாகவும், அதை தவறாக பயன்படுத்தி தனது சொத்துக்களை ஏமாற்றி இருப்பதாக புகாரில் தெரிவித்து இருக்கிறார். இளம் வயதில் இருந்து சம்பாதித்து சேர்த்து வைத்த 25 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை அவர்கள் ஏமாற்றி இருப்பதாக அவர் அந்த புகாரில் கூறியிருக்கிறார். இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

"வேகமெடுக்கு மெட்ராஸ் ஐ பாதிப்பு…" 10 நாட்களுக்கு பள்ளி மாணவர்களுக்கு கண் பரிசோதனை…! அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல்...

Tue Sep 12 , 2023
சென்னையில் மெட்ராஸ் ஐ பாதிப்பு வேகமாக பரவி வருகிறது என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் வடகிழக்கு பருவமழை தொடங்குவதால் மெட்ராஸ் ஐ பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக சென்னையில் மெட்ராஸ் ஐ பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது . குடும்பத்தில் ஒருவருக்கு மெட்ராஸ் ஐ பாதித்தாலே குடும்பம் முழுவதும் பரவ வாய்ப்புள்ளது. மெட்ராஸ் ஐ பாதித்தவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சொட்டு […]

You May Like