”எனக்கு இனி சிக்ஸ் அடிக்குறது தான் வேலை” என பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து விலகும் அண்ணாமலை அதிரடியாக பேசியுள்ளார்.
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை செயல்பட்டு வந்த நிலையில், தற்போது அவர் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய தலைவராக நெல்லை பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்படுகிறார். இந்நிலையில் தான் சென்னையில் தனியார் நிகழ்ச்சியில் அண்ணாமலை உள்பட பல நிர்வாகிகள் பங்கேற்றனர். புதிய பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது மேடையில் பேசிய அண்ணாமலை, ”தமிழக பாஜக தலைவராக இத்தனை நாட்கள் எனக்கென்று ஒரு பொறுப்பு, கட்டுப்பாடு இருந்தது. ஆனால், இனி என்னால் சுதந்திரமாக செயல்பட முடியும். அண்ணாமலையாக நான் அரசியல் பேச முடியும். செய்ய முடியும். எப்போதுமே அடித்து ஆடக்கூடிய பாக்சிங் கலை அரசியல்வாதிகளுக்கு தேவைப்படுகிறது. இதனால் இன்னும் பேச்சு ஸ்டைலை மாற்ற வேண்டும். இனி பக்குவமாக பேச நயினார் நாகேந்திரன் உள்ளார்.
இனி நம்ம பாலை மட்டும் நாம அடித்தால் போதும். பவுன்சர்ஸ், ஃடப் பால்ஸ் எல்லாம் நயினார் நாகேந்திரன் பார்த்துக் கொள்வார். இனி நாம சிக்ஸ் அடிப்பது தான் நமது வேலை. கஷ்டமான பால் எல்லாம் நயினார் ஆடிக்குவாரு” என்று பேசினார்.இந்த பேச்சை கேட்டவுடன் பாஜகவினர் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர்.
Read More : ஜிமெயிலில் ஸ்டோரேஜ் பிரச்சனையா..? தேவையில்லாத மின்னஞ்சல்களை மொத்தமாக டெலிட் செய்யலாம்..!! எப்படி தெரியுமா..?