fbpx

’நம்ம வரலாறு பெருசு’..!! திமுக முன்னாள் எம்பி வேணுகோபால் காலமானார்..!! தலைவர்கள் இரங்கல்..!!

திமுக முன்னாள் எம்.பி. வேணுகோபால் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

திருப்பத்தூர், திருவண்ணாமலை தொகுதிகளில் எம்.பியாக இருந்தவர் வேணுகோபால். 2009 லோக்சபா தேர்தலில் மிக அதிக வித்தியாசத்தில் பாமகவின் காடுவெட்டி குருவை தோற்கடித்தவர் இவர். திமுக மூத்த நிர்வாகியான வேணுகோபால், திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 5 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். 1977 மற்றும் 1984இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் தண்டராம்பட்டு தொகுதியில் வென்று எம்.எல்.ஏவாக தேர்வானார்.

திருப்பத்தூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக 1996, 1998, 1999, 2004 என தொடர்ச்சியாக 4 முறை வென்று எம்.பியாக இருந்தவர் வேணுகோபால். பின்னர் தொகுதி மறுசீரமைப்பில் திருப்பத்தூர் எம்.பி. தொகுதி நீக்கப்பட்டது. கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் தான் திருவண்ணாமலை தொகுதி மீண்டும் உருவானது. திருவண்ணாமலை தொகுதியில் பாமகவின் முன்னணி தலைவரான காடுவெட்டி குருவை எதிர்த்து, திமுக சார்பில் வேணுகோபால் நிறுத்தப்பட்டார். திமுகவின் மூத்த முன்னோடிகளில் ஒருவரான வேணுகோபால் vs காடுவெட்டி குரு என கடுமையான போட்டி நிலவியது.

திருவண்ணாமலை தொகுதி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஒரு சுற்று கூட விடாமல் வேணுகோபால் தொடர்ந்து முன்னணி வகித்து காடுவெட்டி குருவுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இறுதியில், 1 லட்சத்து 48 ஆயிரத்து 300 வாக்குகள் வித்தியாசத்தில் காடுவெட்டி குருவை தோற்கடித்தார் வேணுகோபால். 2009 லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டிலேயே மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர் வேணுகோபால் தான். திருவண்ணாமலை மாவட்ட திமுகவின் மூத்த முன்னோடியாகவும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அவைத் தலைவராகவும் செயல்பட்டு வந்த வேணுகோபால் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். இது திமுக தொண்டர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Chella

Next Post

"பரிதாபமாக பலியான '9' வயது சிறுவன்"... கொலையில் முடிந்த ஓரினச்சேர்க்கை தகராறு.! இளைஞர் போக்சோவில் கைது.!

Thu Feb 15 , 2024
காரைக்காலில் ஓரினச்சேர்க்கை உறவுக்கு மறுப்பு தெரிவித்த நான்காம் வகுப்பு படிக்கும் சிறுவன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக அருள்ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டு போக்சோ சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். காரைக்கால் அருகே உள்ள நல்லாத்தூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் குழந்தை இல்லாததால் தனது சகோதரியின் 9 வயது மகனை தத்தெடுத்து உணர்த்து வந்துள்ளார். அந்த சிறுவன் அங்குள்ள பள்ளியில் […]

You May Like