fbpx

’நம்ம ஸ்கூல் ஃபவுண்டேசன்’..!! அசத்திய ஐஏஎஸ் அதிகாரிகள்..!! ஒருநாள் ஊதியத்தை வழங்குவதாக அறிவிப்பு..!!

தனியார் அமைப்புகள் மற்றும் நபர்களின் பங்களிப்புடன் தமிழ்நாடு அரசும் இணைந்து, அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கு ‘நம்ம ஸ்கூல் ஃபவுண்டேசன்’ என்ற திட்டத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் பேசிய முதலமைச்சர், ‘எல்லா முன்னேற்றத்தையும் அரசே முழுமையாக செய்வது இயலாத ஒன்று. இதற்கு மக்களும் கைகோர்த்து முன்னேற்றத்திற்கு உதவ வேண்டும்’ என்றார். இந்நிலையில், முன்னாள் மாணவர்கள் மூலம் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் ‘நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்’ திட்டத்திற்கு ஒரு நாள் ஊதியத்தை வழங்குவதாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

அரசுப் பள்ளிகளில் பயின்று, தற்போது பல்வேறு நிறுவனங்களில் உயர்ந்த பதவியில் இருக்கும் முன்னாள் மாணவர்கள், தொழிலதிபர்களாக உள்ள முன்னாள் மாணவர்கள், அரசுப்பள்ளிகளை மேம்படுத்த உதவி செய்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த முதல் நாளே 50 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டது. அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்து, சுற்றுச்சுவர், வர்ணம் பூசுதல், இணையதள வசதி, சுகாதாரமான கழிப்பறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகள் போன்ற பணிகள் இந்த திட்டத்தில் மூலம் நடைபெற உள்ளன.

Chella

Next Post

தங்கம் விலை மீண்டும் கிடுகிடு உயர்வு... அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்...

Fri Mar 10 , 2023
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, ரூ.41,520க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்நிலையில் தங்கம் விலை […]

You May Like