இந்தியாவின் மூலம் இதுவரை 424 வெளிநாட்டு செயற்கை கோள்கள் செலுத்தப்பட்டு, அதில் கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி அரசின் கீழ் 389 செயற்கை கோள்கள் செலுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டு செயற்கைகோள்களை செலுத்தியதன் மூலம் கிடைத்த 174 மில்லியன் அமெரிக்க டாலர்களில் கடந்த ஒன்பது ஆண்டுகளில் மட்டும் 157 மில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் பெறப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அதேபோல், 256 மில்லியன் யூரோ வருவாயின் மோடி அரசின் ஒன்பது ஆண்டுகளில் மட்டும் 223 மில்லியன் யூரோ வருவாய் கிடைத்துள்ளது.
திருவனந்தபுரம், ஜம்மு மற்றும் அகர்தலாவில் உள்ள மையங்கள் மூலம் மாணவர்களுக்கு 100 சதவீதம் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், அவர்களில் 50 சதவீதம் பேர் உயர்கல்விக்காக நாசா சென்றுள்ளனர் .