Anand Ambani-Rathika: இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வு குஜராத்தின் ஜாம்கரில் மார்ச் 1 முதல் 3 வரை உலகளவில் கவனத்தை ஈர்த்தது. இந்த நிகழ்வில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை மறக்க முடியாததாக மாற்றினர்.
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழாக்கள் பல மாதங்களாக நடந்து வந்தது. இந்த தொடர் மார்ச் முதல் வாரத்தில் குஜராத்தின் ஜாம்நகரில் திருமணத்திற்கு முந்தைய விழாவுடன் தொடங்கியது ஜாம்நகரில் நடைபெற்ற திருமணத்திற்கு முந்தைய விழாவில் இந்தியா மற்றும் உலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் 50-க்கும் மேற்பட்ட ஏழை ஜோடிகளுக்கு முகேஷ் அம்பானி திருமணம் செய்து வைத்துள்ளார். மும்பையில் உள்ள ரிலையன்ஸ் கார்ப்பரேட் பூங்காவில் நடைபெற்ற இந்த விழாவில், மணமக்கள் குடும்பத்தைச் சேர்ந்த 800க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் முகேஷ் அம்பானியின் குடும்பத்தினர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
மணமக்களுக்கு மங்கள சூத்திரம், திருமண மோதிரங்கள், மூக்குத்தி உள்ளிட்ட தங்க ஆபரணங்கள் வழங்கப்பட்டன. மணமக்களுக்கு தலா ரூ.1.01 லட்சம் சீதனமாகவும், ஒரு ஆண்டுக்குத் தேவையான மளிகை பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள், பல்வேறு வகையான 36 அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பாத்திரங்கள், கேஸ் அடுப்பு, மிக்சி மற்றும் மின்விசிறி, அத்துடன் ஒரு மெத்தை மற்றும் தலையணைகள் உள்ளிட்டவை முகேஷ் அம்பானி குடும்பத்தினரால் பரிசாக வழங்கப்பட்டது.
இந்நிலையில், திருமண ஜோடிகளின் ஒருவரான வாடாவைச் சேர்ந்த மோனிகா ஆங்கனே என்பவர் திருமணம் குறித்த தனது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறுகையில், “எங்களது திருமணம் ஜூலை 2 ஆம் தேதி நிச்சயிக்கப்பட்டது, ஆனால், 50 க்கும் மேற்பட்ட ஜோடிகளுடன் ரிலையன்ஸ் கார்ப்பரேட் பூங்காவில் வைத்து இவ்வளவு பிரம்மாண்டமாக எங்களின் திருமணம் நடைபெறும் என நினைத்துக் கூட பார்க்கல.. இதற்காக அம்பானி குடும்பத்தினருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 50 ஜோடிகளில் ஒருவராக நாங்களும் இருந்ததில் மகிழ்ச்சி அடைகிறோம்” எனத் தெரிவித்தார்.
Read more | Ajith | ஷாலினிக்கு என்ன ஆச்சு..? ஓடோடி வந்த அஜித்..!! மருத்துவமனையில் அறுவை சிகிச்சை..!!