பாலியல் மாத்திரைகளை உட்கொண்டு கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்ததால் கல்லூரி மாணவி உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் நகரை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதைக் கண்ட ராஜ் கவுதம் (25) என்ற வாலிபர், மாணவியின் வீட்டுக்குள் நுழைந்து அவரை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். பாலியல் வன்கொடுமையை அரங்கேற்றுவதற்கு முன்னதாக ராஜ் கவுதம் பாலியல் ஊக்க மாத்திரை உட்கொண்டுள்ளான். இதனால் கல்லூரி மாணவியின் பிறப்புறுப்பில் இருந்து ரத்தப்போக்கு ஏற்படும் வரை பலாத்காரம் செய்துள்ளான். அதிக ரத்தப்போக்கால் கல்லூரி மாணவி மயக்கமடைந்துள்ளார். பயத்தில் அவரை அப்படியே விட்டுவிட்டு தப்பியோடி உள்ளான் ராஜ் கவுதம். சிறிது நேரத்தில் வெளியே சென்றிருந்த மாணவியின் சகோதரி வீட்டிற்கு வந்து பார்த்தபோது அவர் ரத்த வெள்ளத்தில் அலங்கோலமாக கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து வீட்டிற்கு விரைந்து வந்த உறவினர்கள் கல்லூரி மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். பாலியல் வன்கொடுமையின் போது பிறப்புறுப்பில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையிலும் இது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை, தப்பியோடிய காமக்கொடூரன் ராஜ் கவுதத்தை கைது செய்தனர். அவனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.