இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் மிஷன் ஒலிம்பிக் செல் பிப்ரவரி 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் 10 ஜூடோ வீரர்கள், 2 பேட்மிண்டன் வீரர்கள் மற்றும் 3 வாள் வீச்சு வீரர்களுக்கான பயிற்சி மற்றும் போட்டிகளில் கலந்து கொள்வதற்கான நிதி உதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
3 டாப்ஸ் டெவலப்மெண்ட் உள்பட 10 ஜூடோக்கள் & 7 என்சிஓஇ வீரர்கள் உஸ்பெகிஸ்தான் மற்றும் ஜார்ஜியாவில் 21 நாட்களுக்குப் பயிற்சி பெறுவார்கள். அதே நேரத்தில் அவர்கள் உஸ்பெகிஸ்தான், ஜார்ஜியா மற்றும் துருக்கியில் 3 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் கலந்து கொள்வார்கள்.
வீரர்களின் பங்கேற்புகா கட்டணம், விமானகீ கட்டணம், தங்கும் இடம்/போர்டிங், மருத்துவக் காப்பீட்டுச் செலவு, உள்ளூர் பயணம் மற்றும் உணவுச் செலவுகள் ஆகியவை இந்திய விளையாட்டு ஆணையத்தால் ஏற்கப்படும்.