புளியந்தோப்பு அன்சாரி தெருவை சேர்ந்தவர் இளங்கோ (50). இவர் வீட்டில் ரஞ்சித்தின் குடும்பம் அவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு வசித்து வந்துள்ளனர். அதை காலி செய்யுமாறு ரஞ்சித்திடம் இளங்கோ கூறி வந்துள்ளார்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வீட்டை காலி செய்வதாக கூறிய ரஞ்சித், இதுவரை காலி செய்யவில்லை. இதனால் கடந்த 5ம் தேதி மாலை இளங்கோ இதுகுறித்து ரஞ்சித்திடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
அப்போது ரஞ்சித் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து இளங்கோவின் முகத்தில் சரமாரியாக வெட்டினார். ரஞ்சித்துடன் இருந்த அவரது மாமியார் கவிதாவும் இளங்கோவை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் இளங்கோவுக்கு ரத்த காயம் ஏற்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர், பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, புளியந்தோப்பு அன்சாரி தெருவை சேர்ந்த ரஞ்சித் (22), அவரது மாமியார் கவிதா (40) ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தார். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.