இந்தியாவின் டெக் நகரமாக கருதப்படும் பெங்களூர்வாசிகள் சமீப காலமாகவே அதிகமாக வாடகை பிரச்சினையை சந்தித்து வருகின்றனர். பொதுவாகவே டெல்லி, பெங்களூர் போன்ற நகரங்களில் வாழ்வதற்கான செலவு அதிகம் என்ற நிலைதான் உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் பெங்களூரில் வீட்டு வாடகைகளின் மதிப்பு விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது.
பெங்களூரில் வீடு தேடி பிடிப்பது என்பது குதிரை கொம்பாக இருக்கிறது. பல வீட்டு உரிமையாளர்களும் வீடு வாடகைக்கு வருபவர்களிடம் பிறப்பு சான்றிதழ் முதல் கல்வி சான்றிதழ்கள், ஆதார் , வீட்டு கேஸ் பில் வரை வாங்காமல் விடுவதில்லை. இந்நிலையில் தான், தனியார் வீடு பார்க்கும் தளம் ஒன்றில் விளம்பர படுத்தப்பட்டுள்ள வீடு ஒன்றின் விலை பட்டியலை பார்த்து அதிர்ந்து போன நெட்டிசன் ஒருவர் அதை ட்விட்டரில் ட்ரோல் செய்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதே பக்கத்தில் அட்வான்ஸ் கொடுக்க லோன் வேண்டுமென்றால் Apply Loan என்ற ஆப்ஷனும் இருக்கிறது. இதை பார்த்து ஆத்திரமடைந்த அவர் Apply For Kidney Donation என்ற ஆப்ஷனையும் அவர்கள் இணைக்க வேண்டும் என்று ட்ரோல் செய்யும் விதமாக பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இதன் கீழ் தங்களது மோசமான அனுபவத்தையும் பல நெட்டிசன்கள் பகிர்ந்துள்ளனர்.