fbpx

விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது..!! அப்போதே கொடுத்திருந்தால் சந்தோஷமாக வாங்கியிருப்போம்..!! பிரேமலதா வேதனை..!!

இந்தியாவில் மிகவும் உயரிய விருதாக பத்ம விருதுகள் இருந்து வருகிறது. பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ என 3 பிரிவுகளாக இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு 2024ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக விஜயகாந்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுதொடர்பாக பேசிய விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த், ”அவர் உயிருடன் இருக்கும் போதே இந்த விருதை கொடுத்திருந்தால் மிகப்பெரிய சந்தோஷத்துடன் வாங்கியிருப்போம். விஜயகாந்திற்கு காலம் கடந்து பத்ம பூஷன் விருது கொடுக்கப்பட்டுள்ளது. விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது கொடுக்கப்பட்டதற்கு தேமுதிக சார்பாக எங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

கேப்டன் இறந்த பிறகு தான் இந்த விருது கிடைத்திருக்கிறது. இந்த விருதை நான் ஒட்டுமொத்தமாக கேப்டன் மீது அன்பு வைத்துள்ள தமிழர்களுக்கும் உலக தமிழர்களுக்கும் எங்கள் கழக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறோம். கேப்டன் கொடுத்த அன்பு, அவருக்கு பலமடங்கு அன்பு அப்படியே திரும்பி கிடைத்துள்ளது. இந்த அன்பு உள்ளங்களுக்கு பத்ம பூஷன் விருதை கேப்டன் சார்பில் சமர்ப்பித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ”இளையராஜா மகள் பவதாரிணி உயிரிழந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். பவதாரிணியை சிறு வயதில் இருந்தே நான் பார்த்திருக்கிறேன். கேப்டனுக்காக பல பாடல்களை பவதாரிணி பாடியுள்ளார். அவருடைய இனிமையான குரலை இனிமேல் நாம் கேட்க முடியாது. அவருக்கு 47 வயது தான் ஆகிறது. பவதாரிணியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். அவரது ஆன்மா சாந்தியடைய நான் இறைவனை பிரார்த்திக்கிறேன். அவரது இறுதி அஞ்சலியில் தேமுதிக சார்பில் கலந்துகொள்ள இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

Chella

Next Post

"ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு"..!! உடைந்த சிலைகள், சிவலிங்கம் புகைப்படங்கள் வெளியானதால் சர்ச்சை..!!

Fri Jan 26 , 2024
வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி இந்து கோவில்களின் மீது கட்டப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதனைத் தொடர்ந்து வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பிக்கும் படி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில் மசூதி வளாகத்தில் இந்து தெய்வங்களின் சிலைகள் மற்றும் பிற உருவப்படங்கள் இருந்ததற்கான தடயங்கள் இருப்பதாக வெளியாகியிருக்கும் புகைப்படங்கள் மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி […]

You May Like