இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சுழற்பந்து வீச்சாளருமான பிஷன் சிங் பேடி (77) உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிஷன் சிங் பேடி இன்று காலமானார். அவருக்கு வயது 77. இவர் இந்திய அணிக்காக 1967 முதல் 1979ஆம் ஆண்டு வரையில் 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அந்த காலக்கட்டத்தில் எரப்பள்ளி பிரசன்னா, பி.எஸ் சந்திரசேகர், எஸ்.வெங்கடராகவன், பிஷன் சிங் பேடி அடங்கிய நால்வரின் சுழல் கூட்டணி உலக அளவில் பேசப்பட்டது.
67 டெஸ்ட்களில் ஆடியுள்ள பிஷன் சிங் 266 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 10 ஒருநாள் ஆட்டங்களில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவருக்கு கடந்த 1970ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்திருந்தது. இந்நிலையில், பிஷன் சிங் பேடி மறைவுக்கு மத்திய அமைச்சர்கள், கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.