fbpx

பிரபல கிரிக்கெட் வீரர் மற்றும் நடுவர் ஆசாத் ரவூப் காலமானார்….

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நடுவராக இருந்தவரும் பிரபல கிரிக்கெட் வீரருமான ஆசாத் ரவூப் மாரடைப்பால் காலமானார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆசாத் ரவூப்(66) . இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நடுவராக பணியாற்றயுள்ளார். இவர் பெரும்பாலும் இந்த தலைமுறையினருக்கு நடுவராகத்தான் அவரை அறிமுகம். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 64 டெஸ்ட் போட்டிகள் , 139 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 28 டி20 போட்டிகளில் அம்பயராக பணியாற்றி இருக்கின்றார்.

64 டெஸ்ட் போட்டிகளில் 49 போட்டிகளில் கள நடுவராக பணியாற்றி அவர் 15 போட்டிகளில் அம்பயராக பணியாற்றி உள்ளார். ஐ.பி.எல். பேர்டி உள்பட முதல் தர போட்டிகள், லிஸ்ட் ஏ போட்டிகள் என இவர்அனைத்திலும் பணியாற்றி உள்ளார்.

ஐசிசி எலைட் பேனல் அம்பயராக இருந்தபோது ஆசாத் ரவூப் ,ஒரு சூதாட்ட புகாரில் சிக்கினார். இது தொடர்பாக 2016ல் நடந்த விசாரணையில் புகார் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பி.சி.சி.ஐ. அவருக்கு தடை விதித்தது. அதை அடுத்து அவர் ஓய்வுபெற்றார். தற்போது 66 வயதானநிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இரங்கல் தெரிவித்துள்ளது. முன்னாள் வீரர்கள் , அம்பயர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Next Post

சென்னை ஓபன் டென்னிஸ் – இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்திய வீராங்கனை …

Thu Sep 15 , 2022
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை தோல்வியடைந்த நிலையில் இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். உலக மகளிர் ஓபன் டென்னிஸ் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றுவருகின்றது. இந்த தொடரில் ஒற்றையர் பிரிவில் அங்கிதா ரெய்னா மற்றும் கர்மன் தண்டி களமிறங்கினார்கள். இதில் முதல் ஆட்டத்திலேயே ஜெர்மன் நாட்டின் தட்சனா மரியா என்பவரிடம் அங்கிதா தோல்வியடைந்தார். முதல் சுற்று ஆட்டத்தில் வெற்றிபெற்ற மற்றொரு வீராங்கனை கர்மன் தண்டி இரண்டாம் […]

You May Like