ஆசியக் கோப்பைத் தொடருக்கு முன் இலங்கையில் பாகிஸ்தான் – ஆஃப்கானிஸ்தான் இடையே 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இன்று முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது பாகிஸ்தான். பாகிஸ்தான் அணி சார்பில் இமாமுல்ஹக் 61 ரன்களிலும், இப்திகர் அஹமத் 31 ரன்களிலும், ஷதாப் கான் 39 ரன்களும் அடித்து வெளியேறினர், மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, பாகிஸ்தானை அணி 47.1 ஓவர்களில் 10 விக்கெட்டையும் இழந்து 201 ரன்கள் அடித்தது.
பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், முஜீப் உர் ரஹ்மான் பந்தில் டக்அவுட் ஆனார். பாபர் அசாம் 16வது முறையாக டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் பந்துவீசிய முஜீப் உர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளையும், ரஷீத் கான் மற்றும் முஹம்மத் நபி தலா 2 விக்கெட்டுகளையும், பாரூக்கி மற்றும் ரஹ்மத் ஷா தலா 1 விக்கெட்டுகளை எடுத்தனர்.
202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் பேட்டர்கள் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். ரஹ்மானுல்லா குர்பாஸ்(18), அஸ்மத்துல்லா உமர்சாய் (16), இவர்களைத் தவிர அனைவரும் ஒற்றை ரன்னுடன் ஆட்டமிழந்தனர். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 19.2 ஓவர்களில் 10 விக்கெட்டையும் இழந்து 59 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் அணி சார்பில் ஹரிஸ் ரவூப் 5 விக்கெடுகளை கைப்பற்றினார். மேலும் ஷஹீன் அப்ரிடி 2, நசீம் ஷா மற்றும் ஷதாப் கான் தலா 1 விக்கெட்டுகளை எடுத்தனர். இதன் மூல முதல ஒரு நாள் தொடரில் பாகிஸ்தான் 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.