fbpx

பாகிஸ்தான் தேர்தல்!… பிரசாரத்தின்போது வேட்பாளர் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானில் தேர்தலை முன்னிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த இம்ரான்கான் கட்சி ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் வரும் 8-ம் தேதி பொது தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வடமேற்கு பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியான பஜார் பழங்குடியின மாவட்டத்தில் சுயேச்சை வேட்பாளராக ரெஹான் ஜெப்கான் போட்டியிடுகிறார். இவருக்கு இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

ரெஹான் ஜெப்கான் சித்திக்காபாத் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவரது கார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில் ரெஹான் ஜெப்கான் மற்றும் அவரது உதவியாளர்கள் 4 பேர் உடலில் குண்டுபாய்ந்து படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் வேட்பாளர் ரெஹான் ஜெப்கான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான்-இ-இன்சாப் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தாக்குதலுக்கு காரணமானவர்கள் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும் என தெரிவித்தது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Kokila

Next Post

பாவங்கள் போக்கி நிம்மதியை தரும் திருக்கோயில்.! எங்கு உள்ளது தெரியுமா.!?

Fri Feb 2 , 2024
நாமக்கல் மாவட்டத்தில் சேந்தமங்கலம் என்ற பகுதியில் பாலப்ப நாயக்கன் பட்டியில் அமைந்துள்ளது நைனாமலை வரதராஜ பெருமாள் கோயில். கொங்கு நாட்டில் உள்ள வைணவ தலங்களில் புகழ்பெற்று விளங்கும் கோயில்களில் இந்த கோயிலும் ஒன்றாகும். மலையின் உச்சியில் அமர்ந்து பக்தர்களுக்கு தரிசனம் தரும் இந்த பெருமாள் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்பட்டு வருகிறது. இக்கோயில் 120 அடி உயரம் கொண்டு மலையின் உச்சியில் உள்ள ஒரே பாறையில் கட்டப்பட்டதாகும். மேலும் […]

You May Like