இந்திய ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி ஒருவர் ரூ.30,000 பணம் கொடுத்ததாக காஷ்மீரில் பிடிபட்ட பயங்கரவாதி தெரிவித்துள்ளார்..
கடந்த 21-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியின் நவ்ஷேரா செக்டரில் உள்ள கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகே தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே என்கவுண்டர் நடைபெற்றது.. இந்த எண்கவுண்ட்டரில் தபாரக் உசேன் என்ற தீவிரவாதி பாதுகாப்பு படையினரிடம் பிடிபட்டார்.. இந்நிலையில், தபாரக் உசேன் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். பாகிஸ்தானிய ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தன்னை தற்கொலை படை வீரராக மாறும்படி உத்தரவிட்டதாக அவர் கூறியுள்ளார்..
இந்திய ராணுவத்தை தாக்க பாகிஸ்தான் ராணுவத்தின் கர்னல் யூனுஸ் ரூ.30,000 கொடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “நாங்கள் 4-5 பேர் இருந்தோம். பாகிஸ்தான் ராணுவத்தின் கர்னல் யூனுஸ் எங்களை அனுப்பியிருந்தார். எங்களுக்கு பணம் கொடுத்தார்கள். இந்திய ராணுவத்தின் 1-2 நிலைகள் மீது தாக்குதல் நடத்தும்படி எங்களுக்கு உத்தரவிடப்பட்டது..” என்று தெரிவித்தார்..