பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த முன்னாள் காவல்துறை அதிகாரியின் மகன் தனது நண்பனை சுட்டு படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தனது காதலியின் பர்கரை(Burger) நண்பன் சாப்பிட்டதால் ஆத்திரமடைந்த அவர் தனது நண்பனை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்திருக்கிறார்.
பாகிஸ்தான் நாட்டின் கராச்சி(Karachi) நகரைச் சேர்ந்தவர் நசீர் அகமது மிர். ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியான இவர் டிபன்ஸ் ஹவுசிங் அத்தாரிட்டியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது மகனான டேனியல் நசீர் மிர் தனது காதலி சாசியாவை வீட்டிற்கு அழைத்திருக்கிறார். இவரது அழைப்பை ஏற்ற சாசியாவும் டேனியல் வீட்டிற்கு வந்திருக்கிறார்.
டேனியல் வீட்டில் ஏற்கனவே அவரது நண்பர் அலி கெரியோ மற்றும் அலியின் சகோதரர் அஹ்மர் கெரியோ ஆகியோரும் இருந்துள்ளனர். வீட்டிற்கு வந்த காதலிக்கும் தனக்கும் இரண்டு ஜிங்க் பர்கர்களை ஆர்டர் செய்திருக்கிறார் டேனியல். பர்கர்(*Burger) வந்ததும் டேனியல் மற்றும் அவரது காதலி பர்கரை சாப்பிட தொடங்கி இருக்கின்றனர்.
அப்போது அலி கெரியோ சாசியா சாப்பிட்டுக் கொண்டிருந்த பர்கரை வேண்டுமென்றே அவரிடம் இருந்து பிடுங்கி பாதியை சாப்பிட்டு விட்டு மீதியை அவரிடம் கொடுத்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த டேனியல் செக்யூரிட்டி இடமிருந்து துப்பாக்கியை எடுத்து வந்து தனது நண்பன் அலி கெரியோவை துப்பாக்கியால் சுட்டு இருக்கிறார். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த அலி கெரியோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக டேனியலை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.