இந்தியாவில் ஆண்ட்ராய்டு போன் பயனர்களை குறிவைத்து பாகிஸ்தான் ஹேக்கர்கள் செயல்பட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் இந்தியாவின் அண்டை நாடாக இருந்தாலும், பல காலமாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பிரச்சனை இருந்து வருகிறது. இதனிடையே, இந்தியர்களைக் குறி வைத்து பாகிஸ்தான் ஹேக்கர்கள் முக்கியத் தகவல்களைத் திருட முயற்சிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அந்தவகையில், The “Transparent Triber” என்ற குழுவினர், போலியான அப்கள் மூலம் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் உயர் ராணுவ அதிகாரிகளை உளவு பார்த்துவந்ததாக கூறப்படுகிறது.
இந்த குழு, இந்தியாவில் ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துவோரின் தகவல்களை திருட முயற்சி செய்தது தெரியவந்துள்ளது. குறிப்பாக ராணுவத்தில் பணியாற்றுவோர், ஜம்மு காஷ்மீர் பகுதியை சேர்ந்தவர்களின் தகவல்களை திருட 3 அப் மூலமாக பயிற்சி மேற்கொள்ளப்பட்டது தெரியவந்துள்ளது. com.moves.media.tubes, com.videos.watchs.share, com.Base.media.service பயனர்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த அப்ஸை பதிவிறக்கம் செய்வதையோ அல்லது நிறுவுவதையோ தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.