உலகக்கோப்பை போட்டியின் இன்றைய ஆட்டத்தில் பாக்கிஸ்தான் மற்றும் இளநகை அணி மோதி வருகின்றன. இதை முதலில் களமிறங்கிய இலங்கை அணி பாகிஸ்தான் பந்துவீச்சை துவம்சம் செய்தது, குறிப்பாக இலங்கை அணியின் குஷால் மெண்டிஸ் 77 பந்துகளில் 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார், இதில் 14 பௌண்டரீஸ், 6 சிஸேர்கள் அடங்கும், அதன் பிறகு களமிறங்கிய சதீர சமரவிக்ரமாவும் 89 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன் பிறகு களமிறங்கிய இலங்கைஅணியின் ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்தனர். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 344 ரன்களை குவித்தது இலங்கை அணி. பாகிஸ்தான் அணி சார்பில் பந்துவீச்சாளர் ஹசன் அலி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஹாரிஸ் ரவூப் 2 விக்கெட்டுகளையும், ஷாஹீன் அப்ரிடி, நவாஸ், ஷதாப் கான் ஆகியோர் தல 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
345 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கியுள்ளது பாகிஸ்தான் அணி. இதில் துவக்க ஆட்டக்காரரான இமாம் உல் ஹக் தன்னுடைய 3000 ரன்களை 67 போட்டிகளில் கடந்துள்ளார். பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் 68 போட்டிகளில் 3000 ரன்களை கடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
3000 ரன்களை கடந்த சில நிமிடங்களிலே தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார் இமாம் உல் ஹக். அவர் 12 பந்துகளில் 12 ரன்களை எடுத்த நிலையில் மதுஷங்க பந்துவீச்சில் குஷால் பெரேராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த கேப்டன் பாபர் ஆசாம் 10 ரன்களுடன் அட்டமிழந்துள்ளார், தற்போது வரை பாகிஸ்தான் அணி 9 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 40 ரன்களுடன் ஆடி வருகின்றது.