ஐசிசி உலக கோப்பை 2023ன் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று மோத உள்ளது.
இந்த போட்டிக்காக தெலுங்கானா போலீசார் 1,500 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போட்டி தொடர்பான கூட்டத்தை எதிர்பார்த்து, அதிகாரிகள் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு பதினெட்டு பார்க்கிங் இடங்களுக்கும் ஏற்பாடு செய்துள்ளனர். போட்டியை காண வரும் ரசிகர்கள் மெட்ரோ ரயில் சேவைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பார்வையாளர்களே, கவனத்தில் கொள்ளுங்கள்: பார்வையாளர்கள் மடிக்கணினிகள், பேனர்கள், தண்ணீர் பாட்டில்கள், கேமராக்கள், சிகரெட்டுகள், மின்னணு சாதனங்கள், கூர்மையான உலோகம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள், பைனாகுலர், நாணயங்கள், பேனாக்கள், பேட்டரிகள், வாசனை திரவியங்கள், ஹெல்மெட்கள், பைகள், தீப்பெட்டிகள் மற்றும் லைட்டர்கள் மற்றும் உண்ணக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
1996 உலகக் கோப்பைக்குப் பிறகு ( 27 ஆண்டுகளுக்குப் பிறகு) ஹைதராபாத்தில் உலகக் கோப்பை போட்டி நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தமுறை உலக கோப்பையின் 3 போட்டிகள் இங்கு நடக்கவுள்ளது. அதில் முதல் போட்டி இன்று பாகிஸ்தான் நெதர்லாந்து அணிகள் மொத உள்ளதால் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அக்டோபர் 19 ஆம் தேதி நியூசிலாந்து vs நெதர்லாந்து மற்றும் அக்டோபர் 10 ஆம் தேதி பாகிஸ்தான் vs இலங்கை ஒரு போட்டி ஐதராபாத் நடத்துகிறது.
ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் சுமார் 39,000 பேர் அமர முடியும். இந்த மைதானத்தில் உலகக் கோப்பை போட்டி நடைபெறுவது இதுவே முதல் முறை. இதற்கு முன் இரண்டு முறை உலகக் கோப்பை நடைபெற்றபோது, போட்டிகள் லால் பகதூர் மைதானத்தில் நடைபெற்றன.
பாதுகாப்பு நடவடிக்கைகள்: நேற்றைய தினம் ரச்சகொண்டா போலீஸ் கமிஷனர் டி.எஸ்.சௌஹான், கிரிக்கெட் ஸ்டேடியத்தில் போட்டிகள் சுமூகமாக நடைபெறுவதற்கும், அசம்பாவித சம்பவங்களைத் தவிர்க்கவும் முன்னெப்போதும் இல்லாத வகையில் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார். உடனடி நடவடிக்கை எடுப்பதற்காக அனைத்து சிசிடிவி காட்சிகளையும் கண்காணிக்க தெற்கு பகுதியில் கூட்டு கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அறை நிறுவப்பட்டுள்ளது என்ரம் தெரிவித்துள்ளார்.
ஸ்டேடியத்தின் கேட் 1, வீரர்களுக்காக பிரத்யேகமாக வைக்கப்பட்டுள்ளது என்றும், அந்த பகுதியில் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் சவுகான் கூறினார். பார்வையாளர்கள் டிக்கெட்டுகளின்படி நுழைவாயில்கள் வழியாக அனுமதிக்கப்படுகிறார்கள். எத்தகைய அவசர நிலை ஏற்பட்டாலும் அவர்களை வெளியேற்றுவதற்கான திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
போட்டி முடியும் வரை வெடிகுண்டு செயலிழப்பு குழுக்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் நாசவேலை தடுப்பு சோதனைகள் 24 மணி நேரமும் மேற்கொள்ளப்படும் என்றார். நாசவேலைக்கு எதிரான சோதனைகள் மற்றும் நபர்களை சோதனையிடுவதற்காக மைதானத்தின் அனைத்து நுழைவுப் புள்ளிகளிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சமூக விரோதிகளின் நடமாட்டத்தை கண்டறிய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்களின் மொபைல் போன்களை சரிபார்க்க ஒவ்வொரு வாயிலிலும் மூன்று மொபைல் டெக்னீஷியன்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். ரோடு கிளியரன்ஸ் பார்ட்டி, குறிப்பாக ரூட் கிளியரன்ஸ்க்காக, நெரிசல் இல்லாத வீரர்கள் மற்றும் விஐபிகள் மைதானத்திற்குள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது, என்று கூறினார்.
பார்வையாளர்களுக்கு தேவைப்பட்டால் உடனடி மருத்துவ சேவையை வழங்க ஏழு ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. போட்டி மதியம் 2 மணிக்கு தொடங்குவதால்பார் பார்வையாளர்கள் 12 மணியில் இருந்தே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.