fbpx

மக்களை கொல்லும் பால்மைரா தீவு!… கப்பல், விமானங்கள் மாயமாகும் அதிர்ச்சி!

அமெரிக்காவில் அமைந்துள்ள பால்மைரா தீவில் நிகழும் மர்மமான விஷியங்களும், திகிலூட்டும் சம்பவங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பறந்து விரிந்த உலகில் நாம் காணாத அதிசயங்களும் மர்மங்களும் அதிகம் உள்ளன. மேலும் அவை அவ்வாறு இருப்பதற்கான காரணங்களும் இன்று வரை நமக்கு விளங்காத புதிராய் உள்ளது. அந்த வகையில், அமெரிக்காவில் அமைந்துள்ள பால்மைரா தீவு பல மர்மமான விஷயங்களை உள்ளடக்கியுள்ளது. குறிப்பாக அங்கு செல்பவர்கள் எவரும் யாரும் திரும்பி வந்ததே இல்லை.மேலும், அத்தீவில் பல பீதியடைய வைக்கும் சம்பவங்கள் நிகழ்ந்ததாகவும் கூறப்படுகின்றன. இதனால் இந்த பகுதியில் மக்கள் எவரும் வசிக்கவில்லை.

கடந்த 1798-ம் ஆண்டு முதல் இன்று வரை அத்தீவில் நம்பமுடியாத வகையில் பல்வேறு மர்மமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. பல்மைரா என்ற இந்த தீவு நீண்ட காலமாக சபிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இந்த தீவிற்கு செல்லும் கப்பல்கள் மற்றும் விமானங்களும் கூட மர்மமான முறையில் மறைந்துவிடுகின்றனவாம். ஆனால் இதற்கான காரணம் குறித்து எவராலும் கண்டுபிடிக்க இயலவில்லை. அதிலும் ஒரு சிலரோ இத்தீவில் பேய் மற்றும் பிசாசுகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஆனால் இதற்கு மாறாக சிலர் துணிச்சலாக சென்று திரும்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இருந்தாலும், இங்கு ஏதோ மர்மம் இருப்பதாகவும் அவை அத்தீவிற்கு செல்பவர்களை அச்சுறுத்துவதாகவும் கூறியுள்ளனர். குறிப்பாக ஆராய்ச்சியாளர்கள் தீவில் மறைந்துள்ள மர்மங்கள் தொடர்பான தீவிர தேடுதலை மேற்கொண்டுள்ளனர்.

Kokila

Next Post

நெருங்கும் தேர்தல்!… ரூ.60000 கோடி வீட்டுக்கடன்!… வட்டி மானியத் திட்டத்தை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது!

Tue Sep 26 , 2023
அடுத்த ஐந்து ஆண்டுகளில் சிறிய நகர்ப்புற வீடுகளுக்கு மானியத்துடன் கூடிய கடன்களை வழங்க ரூ.60000 கோடியை செலவிட மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு அடுத்தடுத்து பல மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் 2024 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், ஓரிரு மாதங்களில் இந்தத் திட்டம் வங்கிகளால் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை முன்னிட்டு நாட்டு மக்களின் நம்பிக்கையை பெறவும், நாட்டின் […]

You May Like