fbpx

திமுக கூட்டணியில் பாமக, மநீம..? கடுப்பில் வெளியேறும் காங்கிரஸ், விசிக..!! தொகுதிகளுடன் காத்திருக்கும் அதிமுக..!!

திமுக கூட்டணியில் பாமக, மக்கள் நீதி மய்யம் கட்சிகள் இணையும் நிலையில், தமிழ்நாட்டில் கூட்டணிகள் மாறும் நிலைமை உருவாகும் என கூறப்படுகிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், மதிமுக, முஸ்லிம் லீக், கொமதேக, தவாக ஆகியவை இடம் பெற்றுள்ளன. தொடக்கத்தில் 2019 தேர்தல் தொகுதி பங்கீடு பார்முலாவை அப்படியே கடைபிடிக்கலாம் என திமுக தரப்பில் யோசனை முன்வைக்கப்பட்டதாம். தேவைப்பட்டால் சிறிய அளவிலான மாற்றங்களை கொண்டுவரவும் முடிவு செய்யப்பட்டதாம்.

ஆனால் திமுக கூட்டணியில் பாமக இணையலாம் என்கிற பேச்சுகள் பலமாக அடிபடுகின்றன. இதனை உறுதி செய்யும் வகையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும், முதல்வர் முக.ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்தார். இதேபோல மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் திமுகவுடன் இணக்கமாக இருக்கிறார். திமுக கூட்டணியில் பாமக இணைந்தால் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகளுக்கான தொகுதிகள் குறையும். இதில் காங்கிரஸுக்குதான் அதிக பாதிப்பு ஏற்படும்.

பாமக இடம் பெறும் கூட்டணியில் விசிக இருக்காது என்பது அக்கட்சியின் திட்டவட்டமான நிலைப்பாடு. இதனால் காங்கிரஸும் விசிகவும் அதிமுக கூட்டணியை நோக்கி செல்லக் கூடிய சாத்தியங்களை மறுப்பதற்கும் இல்லை எனவும் கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரை எத்தனை கட்சிகள் இணைந்தாலும் ஏற்கும் நிலையில், இருக்கிறதாம். காங்கிரஸ், விசிக என திமுக அணியில் இருந்து வெளியேறும் கட்சிகளுக்கு கவுரவமான தொகுதிகளை ஒதுக்கவும் அதிமுக தயாராக இருக்கிறதாம்.

தற்போதைய நிலையில் காங்கிரஸுக்கு 10 அல்லது 12 தொகுதிகளையும் விசிகவுக்கு 3 அல்லது 4 தொகுதிகளை ஒதுக்கவும் அதிமுக தயாராக இருக்கிறதாம். இதனாலேயே திண்டுக்கல் உள்ளிட்ட சில தொகுதிகளை காங்கிரஸ் வந்தால் விட்டுக் கொடுக்கலாம் எனவும் அதிமுக முடிவோடு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல விசிகவுக்கு சிதம்பரம் தொகுதியை விட்டுத் தரவும் அதிமுக தயாராக உள்ளதாம். திமுக, அதிமுக இரு அணிகளிலும் இன்னும் சில வாரங்களில் கூட்டணிகள் குறித்த தெளிவு பிறக்கும் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.

Chella

Next Post

இன்றைய தினம் சவரனுக்கு இவ்வளவு குறைந்துள்ளதா..? மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்..!! உடனே கிளம்புங்க..!!

Thu Jan 4 , 2024
கடந்த சில தினங்களாக அதிரடியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, இன்று குறைந்துள்ளது. இது நகைப்பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.45 குறைந்து ரூ.46,960-க்கு விற்பனையாகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.5,870 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,720-க்கும், கிராமுக்கு ரூ.6,340 ஆகவும் விற்பனையாகிறது. அதேபோல், […]

You May Like