fbpx

பான் – ஆதார் இணைக்கவில்லையா?… இனிமேல் எதுமே பண்ண முடியாது!… முழு விவரம் இதோ!

பான் – ஆதார் எண் இணைக்காதவர்கள் இனிமேல் வங்கி கணக்கு தொடங்குவது முதல் பணப்பரிவர்த்தனை வரை அனைத்தும் பாதிக்கப்படும். என்னென்ன இழப்புகள் ஏற்படும் என்பதை இந்த தொகுப்பில் தெரிந்துகொள்ளுங்கள்.

பான்-ஆதார் இணைக்கும் காலக்கெடு 30 ஜூன் 2023 அன்றுடன் முடிவடைந்தது. இதுவரை ஆதாருடன் பான் எண்ணை இணைக்காதவர்களுக்கு, அவர்களின் பான் கார்டு ஜூலை 1, 2023 முதல் செயலிழந்து விட்டது என்று அர்த்தம். ஆதாரை பான் அட்டையுடன் இணைக்காதோரின் பல வங்கி பரிவர்த்தனைகள் பாதிக்கப்படும் சூழல் எழுந்துள்ளது. வங்கிகளைத் தொடங்குதல், டீமேட் கணக்குகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேலாக வங்கிக் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்தல் உள்ளிட்ட பல நிதி பரிவர்த்தனைகளுக்கு தற்போது பான் எண் கட்டாயமாகும். இந்தியாவின் வருமான வரித் துறையின் தகவல்களின்படி, ஆதாருடன் இணைக்கப்படாத பான் மூலம் பரிவர்த்தனைகளின் பட்டியல் இங்கே உள்ளன. உங்கள் பான் கார்டு செயலிழந்தால் நீங்கள் சந்திக்கும் பத்து இழப்புகளை தெரிந்து கொள்வோம்.

வரி செலுத்துவோர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யலாம். ஆனால் செயல்படாத பான் அட்டையைப் பயன்படுத்தி பிடித்தம் செய்யப்பட்ட பணத்தைத் திரும்பப் பெற முடியாது. டிடிஎஸ், டிசிஎஸ் அதிக விகிதத்தில் கழிக்கப்படும், சேகரிக்கப்படும். டிமேட் கணக்கைத் தொடங்க முடியாது. ரூ.50,000க்கு மேல் மியூச்சுவல் பண்ட் முதலீடுகளைச் செய்ய முடியாது. அங்கீகரிக்கப்பட்ட பங்குச் சந்தையில் ஒரு நிறுவனத்தின் பங்குகளை, ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.1 லட்சத்திற்கும் அதிகமான தொகைக்கு வாங்கவோ, விற்கவோ முடியாது.

இரு சக்கர வாகனங்கள் அல்லாத மோட்டார் வாகனம் விற்கவோ அல்லது வாங்கவோ முடியாது. வங்கி அல்லது கூட்டுறவு வங்கியில் கணக்கு தொடங்க முடியாது [புள்ளி எண். 12 இல் குறிப்பிடப்பட்டுள்ள நேர வைப்பு மற்றும் அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு கணக்கு தவிர]. கிரெடிட் அல்லது டெபிட் கார்டு வாங்க விண்ணப்பம் செய்ய முடியாது. வங்கி நிறுவனம் அல்லது கூட்டுறவு வங்கியில் ஒரு நாளில் 50,000 ரூபாய்க்கு அதிகமான தொகையை பணமாக செலுத்த முடியாது, பெறவும் முடியாது. ஆயுள் காப்பீட்டு பிரீமியமாக ஒரு நிதியாண்டில் 50,000 ரூபாய்க்கும் மேலாக செலுத்த முடியாது. சட்டத்தின் பிரிவு 50C-ல் குறிப்பிடப்பட்டுள்ள முத்திரை மதிப்பீட்டு ஆணையத்தால் மதிப்புள்ள ரூ.10 லட்சத்துக்கும் மேலான தொகைக்கு ஏதேனும் அசையாச் சொத்தை விற்பனை செய்யவோ அல்லது வாங்கவோ முடியாது

Kokila

Next Post

இன்றுமுதல் மெரினாவில் பீச் வாலிபால் போட்டிகள்!... அனுமதி இலவசம்!... தமிழக அரசு அறிவிப்பு!

Sat Jul 8 , 2023
இன்று முதல் 11ம் தேதி வரை சென்னை மெரினா கடற்கரையில் பீச் வாலிபால் போட்டிகள் நடைபெறவுள்ளதால் அனைவரும் கலந்துகொள்ளுமாறு தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் கோப்பை 2023 என்ற பெயரில் சென்னை மெரினா கடற்கரையில் ஜூலை 8 அதாவது இன்று முதல் – ஜூலை 11ம் தேதி வரை பீச் வாலிபால் போட்டிகள் நடைபெற உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மாநில […]
’விளையாட்டு வினையாகும்’..!! காதலிக்கு பிறந்தநாள் பரிசாக உயிரைக் கொடுத்த காதலன்..!! சென்னையில் அதிர்ச்சி

You May Like