fbpx

தெறிக்கவிடுகிறது… வடிவேலுவின் குரலில் “பணக்காரன்”பாடல்….

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நாயகனாக நடிக்கும் படம் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. தலைநகரம், மருதமலை என எவர்க்ரீன் காமெடிகளை தந்த சுராஜ் படத்தை இயக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ரெடின் கிங்ஸ்லி, சிவாங்கி, ஷிவானி ஆனந்தராஜ் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் அப்பத்தா பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது. அந்தப் பாடலுக்கு பிரபுதேவா கோரியோக்ராஃபி செய்திருந்தார். வடிவேலு பாடியிருந்தார். இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது தெரியவந்திருக்கிறது. அதன்படி நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படமானது டிசம்பர் 9ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் நேற்று வெளியிட்டிருந்தது.

இந்த படத்தின் இரண்டாவது பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது “oh my god நாம பணக்காரன்” எனும் இந்த பாடலை வடிவேலு மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகிய இருவரும் பாடியுள்ளனர். நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

Kathir

Next Post

ஹேப்பி நியூஸ்...! பள்ளி மாணவர்களுக்கு மூன்று மாதம் குளிர்கால விடுமுறை...! அரசு அறிவிப்பு...!

Sun Nov 27 , 2022
பள்ளி மாணவர்களுக்கு மூன்று மாதம் குளிர்கால விடுமுறையை ஜம்மு காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது. மலைப்பகுதியில் பனிப்பொழிவு நிலவி வருவதால், ஜம்மு காஷ்மீர் அரசு, குளிர்காலம் தொடங்குவதைக் கருத்தில் கொண்டு பள்ளத்தாக்கில் உள்ள பள்ளிகளுக்கு மூன்று மாத குளிர்கால விடுமுறையை அறிவித்தது. ஆரம்ப நிலை முதல் (நர்சரி முதல் 5ம் வகுப்பு வரை) வகுப்புகள் டிசம்பர் 1ம் தேதி முதல், 6 முதல் 8ம் வகுப்பு வரை டிசம்பர் 12ம் தேதி […]

You May Like