fbpx

விஜய் டிவியுடன் பஞ்சாயத்து..!! வேறு சேனலுக்கு தாவிய வெங்கடேஷ் பட், தாமு..!! அப்படினா CWC..?

’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி பலருடைய மனக்கவலையை குறைக்கும் ஒரு நிகழ்ச்சியாக இருக்கிறது. ரசிகர்கள் மத்தியிலும் இந்த நிகழ்ச்சிக்கு நாளுக்கு நாள் வரவேற்பு இருந்தது. இந்த நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என்று ஒவ்வொரு சீசன் முடிவடைந்ததுமே ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருவார்கள். அந்த வகையில், இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்து விட்டது. ஆனால் ஐந்தாவது சீசன் இன்னும் தொடங்கப்படவில்லை.

இதனால் இணையத்தில் இந்த நிகழ்ச்சி குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு வெங்கடேஷ் பட் அதிரடியாக ஒரு போஸ்ட் போட்டிருந்தார். அதில் தான் இந்த சீசனில் இருந்து வெளியேற போவதாக கூறியிருந்தார். அதை தொடர்ந்து இன்னொரு வீடியோவும் வெங்கடேஷ் வெளியிட்டு இருந்தார். அதில் தான் மட்டுமல்லாமல் தன்னோடு செஃப் தாமுவும் வரப்போகிறார். எங்களுடைய கூட்டணியை நீங்கள் இன்னும் ஒரு பெரிய நிகழ்ச்சியில் பார்ப்பீர்கள் என்று தெரிவித்திருந்தார்.

இப்படியான நிலையில், இணையத்தில் இவர்கள் இருவரும் சன் டிவியில் புதியதாக தொடங்கப்படும் சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இது குறித்து அதிகாரப்பூர்வமாக வெங்கடேஷ் பட் மற்றும் செப் தாமு இருவரும் பேசவில்லை. ஆனாலும், வெங்கடேஷ் பட் வெளியிட்ட வீடியோவிற்கு கீழே அதிகப்படியான கமெண்ட்கள் இவர்கள் சன் டிவியில் புதியதாக தொடங்க இருக்கும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று கூறி வருகின்றனர். ஆனாலும், என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். பொதுவாக இந்த மாதிரி பிரபலங்கள் கருத்து தெரிவிக்கும் போது அது பற்றி இணையவாசிகள் சொல்வது தான் கடைசியில் நடந்திருக்கிறது.

English Summary : Venkatesh Bhatt jumped to another channel, Damu

Read More : S.P.Velumani | ’நான் பாஜகவில் இணைகிறேனா’..? மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பரபரப்பு தகவல்..!!

Chella

Next Post

PM MODI| "தமிழக மக்கள் அறிவாளிகள்; பாஜக மீது முழு நம்பிக்கை வந்து விட்டது" - பல்லடம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரை.!

Tue Feb 27 , 2024
பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டம் இன்று பல்லடத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பாரத பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு உரை நிகழ்த்தினார். அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவை முன்னிட்டு பல்லடத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பெரும் திரளான பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டனர் இந்தக் கூட்டத்திற்கு வருகை புரிந்த […]

You May Like