fbpx

சாதிரீதியாக துன்புறுத்தல் … பெண் ஊராட்சிமன்றத் தலைவி பரபரப்பு புகார்..

கரூரில் பட்டியலின ஊராட்சி மன்ற தலைவிக்கு சாதிரீதியான பாகுபாடு காட்டப்படுவதாக ஊராட்சிமன்றத் தலைவி காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

கரூர் மாவட்டம் கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நன்னியூர் ஊராட்சியின் தலைர் , துணைத்தலைவர் உள்பட பத்த பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அதிமுகவை சேர்ந்த 5 பேரரும் திமுகவைச் சேர்ந்த உறுப்பினர்கள் 5 பேர் என 10 பேர் உறுப்பினர்களாக உள்ள நிலையில் ஊராட்சி தலைவராக சுதா என்பவர் இருக்கின்றார்.

இது குறித்து வாங்கல் காவல் நிலையத்தில் நேற்று ஊராட்சி தலைவி சுதா புகார் அளித்துள்ளார். அதில் , தனது தலைவர் பவியில்கடமையை செய்யவிடாமல் குறுக்கீடு செய்து மன ரீதியாக உளைச்சல் ஏற்படுத்தியும் , சாதி ரீதியாக பாகுபாடு செய்வதாக குறிப்பிட்டுள்ளார். அதிமுகவைச் சேர்ந்த நல்லுசாமி என்பவர் மீது இந்த புகாரை வைத்துள்ளார். அலுவலகப் பணியை செய்வதில் இடையூறு ஏற்படுத்த்தி வரும் முன்னாள் ஊராட்சித் தலைவரான குமாரசாமி ( திமுக)மற்றும் அலுவலகப் பணியில் ஒத்துழைப்பு கொடுக்காத ஊராட்சி செயலர் நளினி மற்றும் அவரது கணவர் மூர்த்தி அலுவலகத்திற்கு வந்து தங்களுக்கு எதிராக செயல்படுவதாக கூறியுள்ளார்.

இது குறித்து நேற்று நன்னியூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில்மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலர் லீலா குமார் மற்றும் கரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.  முழு விசாரணைக்குப் பின்னர் என்ன நடந்தது என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Next Post

கனடாவில் வசிக்கும் இந்தியர்கள் , மாணவர்கள் எச்சரிக்கையாக இருங்கள்… வெளியுறவுத்துறை எச்சரிக்கை

Sat Sep 24 , 2022
அமெரிக்கா மற்றும் கனடாவில் பிரிவினை வாத வன்முறை செயல்கள் மற்றும் இந்தியர்களுக்கு எதிரான நடவடிக்கை அதிகரித்துள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கனடாவில் வசிக்கும்இந்திய குடிமக்கள், குறிப்பாக மாணவர்கள் எச்சரிக்கை மற்றும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் பிராம்ப்டன் என்ற நகரில் சீக்கிய பிரிவினைவாத அமைப்பு காலிஸ்தான் அமைப்பு தனி காலிஸ்தான் நாடு என்ற தீர்மானத்தை கொண்டு வந்து வாக்கெடுப்பு நடத்தியது. இந்த வாக்கெடுப்பு உள்நோக்கத்துடன் […]

You May Like